உலகத்தில் அச்சு ஊடகத்தின் செயற்பாடுகள் அத்தியாவசியமானது.குறிப்பாக தின நாளிதழ்களின் ஆதிக்கம் சமூக வலைத்தளங்களின் ஆக்கிரமிப்பால் சற்று குறைந்தாலும் கூட புதிய நாளிதழ்களின் வருகை அவசியமானது.
ஏற்கனவே வெளியாகி வரும் தமிழ் நாளிதழ்களின் நம்பகத்தன்மையும் சற்று சிந்திக்க வேண்டி உள்ளது.கடந்த பல வருட காலமாக நமக்கு செய்திகளை வழங்கிய இந்த பத்திரிக்கைகள் தொடர்ந்தும் செய்திகளை வழங்க வேண்டும்.
இப்படிக்கு பல தமிழ் நாளிதழ்கள் தமிழர்களின் செய்தி பசியை போக்கும் இக்காலகட்டத்தில் புதிய வரவாக இன்று வெளிவந்துள்ளது தமிழன்.
சிவராஜா ராமசாமி அவர்கள் ஊடகத்துறை நண்பர்களும் ,செய்தி ஆசிரியர்களும் அறிந்த பெயர்.பத்திரிக்கை துறையில் சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை விட வாசகர்களுக்கு கிடைக்க வேண்டிய சரியான தகவலை அதுவும் ஆழமாக ஆய்வு செய்து தருவதற்க்காகவே கருத்துரிமைக் காவலன் என்ற மகுடத்துடன் வெளியிட்டுள்ளார்.
அவரது இணையத்தளத்தில் செய்திகளை வெளியிட்டு வந்தவர் தற்போது நாளிதழ் வடிவில் வெளியிடுவது மகிழ்ச்சியே.
எப்போதும் இலங்கை கலைஞர்களின் முன்னேற்றத்தில் பங்காளியாக இருக்கும் நாம் அவரிடம் விடுக்கும் வேண்டுகோள் இலங்கை தமிழ் கலைஞசர்களையும் காக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு இலங்கை தமிழ் கலைஞர்களின் படைப்பு செய்திகளை நீங்கள் வழங்கி அவர்களின் குறுந்திரைப்படங்களுக்கு விளம்பரங்களை வழங்குவதன் மூலம் அச்சு ஊடக துறையின் மீது கலைஞர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும்.
திருவாளர் சிவராஜா ராமசாமி அவர்களுக்கும் தமிழன் குடும்பத்திற்கும் இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.