உளி படாத கல் சிலை ஆவதில்லை அது போல் உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை என்பற்கு அமைவாக தயாரிப்பாளர்களான கந்தையா இராசநாயகம், கந்தையா கோணேஸ்வரன் தயாரிப்பில், ROHAD Film Production நிறுவனத்தினால் வழங்கவுள்ள “மறைபுதிர்” குறும்பட இயக்குனர் Jana mohendran இயக்கத்தில் உருவாகும் புதிய பெயர் சூட்டப்படாத குறும் படத்துக்கான பூஜை இம்மாத ஆரம்பத்தில் நடாத்தப்பட்டது.
இப் படத்திற்கான இரண்டு பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இனி வருகின்ற நாட்களில் படப் பிடிப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்,பிரத்தியேகமாக ஒளிப்பதிவுக்கென துறைசார் ஒருவர் பணியை மேற்கொள்ள கைகோர்த்துள்ளார், இப் படத்தில் “அ” கலையகம்,GS STUDIO(KARUKAMUNAI), T.J.ரேனுஜன், கிஷாந்த்,Tn.சதீஷ்,துலாபரணி,விது,அகல்யா,சந்துரு,கிறிஷ்,திவ்யா,ஹிநிசாசூந்தன்,தவராஜா,குணபாலசிங்கம்,மற்றும் பல மட்டக்களப்பு கலைஞர்களும், தொழிநுட்ப நிறுவனங்களும் இவர்களோடு இணைந்து பணியாற்றவுள்ளனர்.
மறை புதிர் வெற்றியைத் தொடர்ந்து முக்கிய காதாபாத்திரத்திரங்களில் KIRUPA/KUJENTHAN/MURALI, வெருகல் பிரதேசத்தில் உள்ள அனேக கலைஞர்களும், திருகோணமலை மாவட்ட, கலைஞர்களும், கொழும்பு/யாழ்ப்பாண கலைஞர்களும் இப் படத்தில் பயணிக்கவுள்ளனர் ,சமீப காலமாக கிழக்கு மாகாண கலைஞர்கள் ஒன்றினைந்து உருவாக்கும் பல கலைப் படைப்புகள் வெளிவந்து மாவட்டங்களுக்கு இடையேயான கலைத்துறை ஒற்றுமையை வளப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது