கானா பாடல்கள் என்பது ஒரு வித மஜா தான். அந்த மஜாவை சரியாக பாடும் குரல்களும் அரிது.
அப்படி பல பாடகர்களும் இலங்கையில் இருந்தாலும் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் புகழ் பெற்ற பாடகர் நவகம்புர கணேஷ்.
இவருக்கு உள்ள சிறப்பு திறமை என்னவென்றால் ஆடலுடன் பாடல் தான்.மேடையை அலங்கரிக்க கூடிய சிறந்த கலைஞன்.
ஆசியன்ஸ் செந்தூரன் பல கலைஞசர்களுக்கு தனது இசையில் சந்தர்ப்பம் வழங்கி வரும் நிலையில் நவகம்புர கணேஷ்க்கு மிக பெரிய சந்தர்ப்பம் ஒன்றை வழங்கி இதுவரை யாரும் யோசிக்காத விடயத்தை முயற்சி செய்துள்ளார்.
தர்ஷன் தபேலா வாசிக்க செந்தூரனின் இசையில் அருமையான மேஷப் இசையை கலவையை வெளியிட்டுள்ளார்.
தேவாவின் பாடல்களுடன் வெளியாகியுள்ள இந்த மேஷப்க்கு ஒரு சல்யூட் …சூப்பர் செந்தூரன் ஜி .உங்கள் முயற்சியில் என்றும் நாம் துணை நிற்போம்.
உங்கள் குழுவுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.