துருப்பிடித்த கற்பனைகளுக்கு இயக்குனரின் புதிய துவக்கு | மதிசுதா

மதி சுதா ஈழத்தின் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர்.இவரின் எல்லையற்ற சினிமா பற்றும் எல்லையை தாண்டிய விருதுகளும் இன்னமும் ஈழத்து சினிமாவை உலகம் முழுவதும் பேச வைத்துக்கொண்டிருக்கிறது.

இவரின் அத்தனை படைப்புகளும் பல சோதனைகளை கடந்து தான் வெளிவருகிறது.தான் படைப்புக்களை வெளியிடுவதில் முகம் கொடுக்கும் நெருக்கடிகளை எந்த நெருடலும் இல்லாமல் நேரடியாக பதிவு செய்யும் ஒரு முற்போக்கு எழுத்தாளர்.

தனது படைப்பு தொடர்பாக அவர் வெளியிட்ட ஒரு பகிரங்க பதிவில் சில நய்யாண்டி சகாக்களை பற்றியும் குறிப்பிட்டார்.
நேற்று இரவு ”வெடிமணியமும் இடியன் துவக்கும்” குறும்படத்தை வெளியிடப்போவதாக ஒரு பதிவிட்டேன். தயாரிப்பாளர் உள்ள யாராவது எடுத்து முழுநீளப்படமாக்கினால் வெளியிடாமல் கையளிப்போம் என நினைத்துத் தான் இட்டேன். இதன் மூலம் குறையில் இருக்கும் எனது “Dark days of heaven” படத்தை முடிக்கும் திட்டமே இருந்தது.
ஆனால் அதைக் கூட என் சக படைப்பாளிகள் நையாண்டி செய்து பதிவிட்டதையும் கேலிச்சிரிப்புக்கள் இட்டதையும் கண்ணுற்றும் சிரித்து விட்டுக் கடந்தேன்.
ஏனென்றால் நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருப்பதால் இறங்கி நின்று இவர்களிடம் எல்லாம் வழி கேட்க வேண்டிய தேவை எனக்கில்லை என நினைக்கிறேன்.
சரி…. சந்தோச செய்தி என்னவென்றால் newborn cinema நல்லதொரு தொகைக்கு அக்குறும்படத்தை வாங்கி தனது youtube channel இல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29.5.2020) காலை 6 மணிக்கு வெளியிடுகின்றது.
உங்கள் கருத்துக்களை தாராளமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
திட்டமிட்ட கிசாந்க்கும் அழகாக வடிவமைத்த சசிக்கும் நன்றிகள்.

ஈழ வாழ்வியலின் ஒரு சிறிய பகுதியை சொல்லும் ஒரு குறும்படம் இந்த “வெடி மணியமும் இடியன் துவக்கும் “.

இவ்வாறு இப்படி இந்த படைப்பு தொடர்பாக பதிவை வெளியிடும் போது இவரது பேசப்படும் படைப்புகள் பற்றியும் சிலருக்கு தாங்க முடியாது பொறாமை உள்ளது.

எது எப்படியோ ”வெடிமணியமும் இடியன் துவக்கும்” எத்தனையோ விடயங்களை சொல்கிறது.ஈழத்தின் வாழ்வியல் விடயங்களோடு தொடர்புடையது.

முல்லை யேசுதாசன் , கமலராணி, சங்கர் , ஜசீதரன், கேசவராஜன், தர்சன் ஆகியோரின் நடிப்பு பெரிதும் பலராலும் பேசப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒளிப்பதிவு – ரிசி செல்வம் ,படத்தொகுப்பு – சன்சிகன், இசை மற்றும் ஒலி – பத்மயன் , உதவி இயக்கம் – குருநீலன் ,தயாரிப்பு – ஐங்கரன் கதிரிகாமநாதன், மதி சுதா எழுத்து, இயக்கம் – மதிசுதா என்ற ஒரு சிறிய அணியின் மிகப்பெரிய அளவில் பேசப்படும் கதையே ”வெடிமணியமும் இடியன் துவக்கும்”.

ஈழம் சினிமாவின் நீண்ட காலமாக காத்திரமான சினிமாக்களை உருவாக்க முனைந்து கொண்டிருக்கும் இயக்குனர் மதி சுதா, இந்த குறும்படத்தில் பல வாழ்வியல் பதிவுகளை சுவாரஷ்யமாக பதிந்து சென்றுள்ளார்.

வெடிமணியத்தை வெளியிடுவதில் Newborn Cinema பெரும்மகிழ்ச்சி அடைகிறது.

”வெடிமணியமும் இடியன் துவக்கும்” படக்குழுவுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!