ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இசைக்கலைஞர்கள் பங்குகொண்ட ” இசையால் இணைவோம் ” Covid 19 விழிப்புணர்வுப்பாடல், இன்று மாலை 6.30 மணிக்கு , உலக அறிவிப்பாளர் B.h. Abdul Hameed அவர்களின் ஆசியுடன் இலங்கையின் மூத்த கலைஞர் முத்தழகு ஐயா மற்றும் இலங்கை தமிழ் இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு மஹிந்தகுமார் அவர்கள் அடங்கலாக சமூகவலைத்தளங்களில் வெளியிடபட்டது .
இந்த வெளியீட்டினை நேரலையாக Shameel J Niroshan Music Varnam TV Digital போன்ற தளங்களில் பார்க்க கூடியதாக இருந்தது.
எமது கலைஞர்களின் 60 பேருக்கு அதிகமானவர் பாடிய இந்த பாடல் இலங்கை வரலாற்றில் இது வரை அதிகமான கலைஞ்சர்கள் சேர்ந்து பாடிய பாடலாகும்.
அனைவரும் தமது கையடக்க தொலைபேசி மூமலே தங்கள் குரல் பதிவு காணொளிகளை அனுப்பியதாக இந்த பாடலின் ஒருங்கிணைப்பாளர் நிரோஷ் விஜய் தெரிவித்துள்ளார்.
ஷமீல் இசையில் இந்த பாடல் 7 நிமிடமும் 25 வினாடிகளையும் கொண்டதாக அமைந்துள்ளது.
இந்த பாடலில் பங்கு கொண்ட கலைஞர்களுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.