உலகம் இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் மாபெரும் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு எதிராக பலர் பலவிதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் இந்த சூழ்நிலையில் இலங்கையில் வாழும் நமது படைப்பாளிகள் அவர்களது விழிப்புணர்வு கருத்துக்களை இலங்கையின் படைப்பாளிகளின் இணையத்தளமான #Lankatalkies மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இசையமைப்பாளர் ஷமீல் மற்றும் பாடகர் நிரோஷ் முயற்சியில் கொரோனா பாடல் ஒன்று தயாராகி வருகிறது.
இந்த பாடலுக்கு தமது முழு ஆதரவை இலங்கை தமிழ் இசை கலைஞ்சர்கள் சங்கம் வழங்கியுள்ளது
கிட்டத்தட்ட 50 நமது பாடகர்கள் இந்த பாடலை பாடியுள்ளனர்.இந்த கொரோனா விழிப்புணர்வு பாடல் பேசப்படும் பாடலாக மாறும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
இந்த பாடலுக்கு சதீஷ் காந்த் ,ஸ்மித் மற்றும் நவீன் ஆகியோர் சிறப்பு பங்களிப்பு வழங்க இம்மாதம் 19 ஆம் திகதி ஷமீல் யூ டியூபில் வெளியாகிறது.
ஷமீல் உட்பட அனைத்து பாடகர்களுக்கும் இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.