ஜிfப்ரி நினைவு நாள்…. ஒன்று கூடிய ஒலிபரப்பாளர்கள்

அதிக எண்ணிக்கையில் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடலுக்கு களம் அமைத்த ஸ்ரீலங்கா ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மறைந்த சிரேஷ்ட ஒலிபரப்பாளர் நண்பர் ஏ ஆர் எம் ஜிfப்ரி அவர்களின் நினைவு நாள் நிகழ்வும் அவர் பற்றிய நூல் வெளியீடும் நேற்று மாலை கொழும்பில் சஹ்ரான் மண்டப அரங்கில் இடம்பெற்ற போது.

SLBA- Sri Lanka Broadcasters Association எனும் ” ஒலிபரப்பாளர் ஒன்றியம் ” ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஷ்ட ஒலிபரப்பாளரும், நேத்ரா அலைவரிசை மற்றும் ரூபவாகினி தமிழ் செய்திகள் பணிப்பாளருமான அல்ஹாஜ் UL யாக்கூப் அவர்களது தலைமையில் நேற்று (2020.02.29) மாலை தெஹிவளை Shaharan Banquet மண்டபத்தில் நடைபெற்ற அண்மையில் மறைந்த பிரபல ஒலிபரப்பாளர் மர்ஹூம் அல்ஹாஜ் ARM ஜிப்ரி அவர்களை நினைவுகூரும் ஒன்று கூடல் நிகழ்விலும், “ஏ.ஆர்.எம்.ஜிப்ரி – ஒரு சகாப்தம்” ஞாபகப்பதிவு நூல் வெளியீட்டிலும்கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புக் கிட்டியது.

முன்னெப்போதும் நடந்திராத வகையில் இந்நிகழ்வைத் தமது தலைவருடன் இணைந்து அமைப்புக்குழு உறுப்பினர்களான AM தாஜ், இர்ஷாத் A. காதர், இஸ்மாயில் M.இல்யாஸ், ரஸ்மி மௌலானா, நிஸார் காரியப்பர், MI சிஹாமுத்தீன் ஆகியோர் மிக நேர்த்தியாக ஒழுங்கு செய்திருந்தமை அனைவரையும்வியக்க வைத்தது.

நிகழ்வில் சிறப்புச் சொற்பொழிவுகளைஉலகறிந்த அறிவிப்பாளர் BH அப்துல் ஹமீத் அவர்களும், கொழும்புப் பல்கலைக் கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேச மூர்த்தி அவர்களும் நிகழ்த்தினார்கள்.

மர்ஹூம் ஜிப்ரி மீது நேசம் கொண்ட ஏராளமான ஊடகவியலாளர்களும், பல தசாப்தங்கள் ஜிப்ரி நடத்திய நிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கிய நிறுவன அதிபர்களும், ஜிப்ரி அதிபராய்ப்பணியாற்றிய பாடசாலை சார்ந்தோரும்,ஜிப்ரி அவர்களது குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!