யாரையும் நம்பி நேயர்கள் இல்லை – மனம் திறந்தார் கோகுல்

அறிவிப்பாளர் கோகுல்நிரஞ்சன் எமது இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்

1 .ஊடக பிரவேசம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்

சின்ன வயசு கனவு பாடசாலை நாட்களில் பாட புத்தகத்தை எடுத்து படித்ததை தாண்டி அதை mic (மைக்கா) மாற்றி பேசுறது செய்தி வாசிக்குறது பொழுதுபோக்கு உயர்தரம் முடிந்து ஒரு வருடத்தில் ஒரு பத்திரிக்கைல இணைய செய்தி வாசிப்பாளரா பயணத்தை தொடர இருந்த நேரம் தவிர்க்க முடியாத காரணம் அது கைவிட்டு போனது… பிறகு சந்தர்ப்பம் வானொலிகளில் கிடைக்க இல்ல… வழியின்றி இன்னொரு துறையில் வேலை செய்து பல வருடங்கள் கழிந்து என்னுயிர் சக்தியில் (FM / TV) சந்தர்ப்பம் கிடைத்தது.

2 .சக்தியில் முதல் கிடைத்த சந்தர்ப்பத்தின் போது யார் உங்களை அறிமுகம் செய்து வைத்தார்கள்?

காண்டீபன் அண்ணா channel head ஆக இருந்த நேரம் அறிமுகம் கிடைத்தது.
யார் அறிமுகம் செய்தார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டதால கண்டிப்பாக பதில் சக்தி குடும்பம் என்றுதான் சொல்லனும்.
காற்றலையில் ஒரு அறிவிப்பாளராக அறிமுகமான போது studioல கணா அண்ணா, காண்டீபன் அண்ணா, கிருஷாந்தன், பிருந்தகன் ஆகியோர் இருந்தமை இன்னும் ஞாபகம் இருக்கின்றது.

முதல் நிகழ்ச்சி சிநேகிதி புதுவருட சிறப்பு நிகழ்ச்சி (10am to 12) program முடிச்சுட்டு எங்கட section க்கு போற நேரம் கணா கூப்பிட்டு “தம்பி நல்லா இருந்துச்சிடா show இன்டைக்கு மோகன் leave நீ தனியா தான் overnight program செய்யனும்” என்று சொன்னேர்.
இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் ஒரு புத்தாண்டு. நள்ளிரவு 12 மணி நெருங்குது, பதற்றம் பட பட ன்னு இதயம் துடிக்குற நேரம் நிலாச்சோறு கடைசி link இல் செல்டன் அண்ணா கொடுத்த அந்த அறிமுகம் ஒரு நம்பிக்கையையும் துணிச்சலையும் எனக்கு தந்தது.

அபர்ணா அண்ணா, பிரேம் அண்ணா, மயூரன் அண்ணா, மோகன் அண்ணா, கணா அண்ணா, பிரஜிவ் இவர்களிடம் கற்றுக்கொண்டது அதிகம். இவர்களை பார்த்து இவர்களுடைய வானொலி படைப்புகளை ரசித்த எனக்கு இந்த அண்ணாக்களுடன் பணிபுரிந்த அனுபவம் ஒரு வரம்.

சக்தி குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பங்கு இருக்கின்றது நான் சக்தியில் அறிமுகமான போது என்னோடு துணை நின்றவர்கள் ஆரணி, பிரசாந்த், கீர்த்தனன், ரவூப் அண்ணா, விக்கி, பிரனிதா, வனிதா, கௌரி, அப்சான், ஹம்சி மற்றும் விரிவாக்கல் பிரிவு சுதா அண்ணா, சதா,தர்சன் குட்டி சுதா, கேதிஸ். தர்ஷி, ஒஸ்மன்

3 . நீங்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி?

சக்தியில் நான் தொகுத்து வழங்கிய அத்தனை நிகழ்ச்சிகளையும் என்னால் மறக்கமுடியாது. ஒவ்வொரு பாடல்கள் கேட்கும் போது ஞாபகம் ஒவ்வொன்றாய் வரும். (இந்த ஞாபகத்திற்கு என்னை கட்டுப்படுத்த முடியவில்லை அதுதான் அடிக்கடி முகப்புத்தகத்தில் பதிவுகள் குவிகின்றன

🤔

சக்தியில் வெறுமனே பாடல்களை மாத்திரம் ஒலிபரப்புவது குறைவு ஏதாவது நல்லதொரு விடயத்தை எம் உறவுகளுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு நம்மவர்களின் படைப்புகளையும் உலகறிய செய்யனும் என்ற நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட “Facebook தோழா” segment.

இதயம் பேசியதே நிகழ்ச்சி பலவற்றை பேசி இருக்கின்றது. ஆரணியுடன் அந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய நாட்கள் சிறந்த அனுபவம் தந்தது. சக்திகொடு என்ற செயற்திட்டம் பலருக்கு பயனுள்ளதாக அமைந்தது இதற்கு முழுமையாக ஆதரவை எமக்கு வழங்கிய எம் உறவுகளுக்கு நன்றி.
அதிக நாட்கள் நான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் இதயம் பேசியதே, ஞாயிறு வணக்கம் தாயகம், HELLO SHAKTHI, அந்தநாள் ஞாபகம் என்றும் மறக்கமுடியாது அவ்வப்போது my shakthi இல் எனக்கு கிடைத்தது energetic drink அது ரொம்ப பிடிக்கும்.

மறக்க வழி தெரியாமல் வலியை மட்டும் ஒவ்வொரு ஞாயிறும் சுமந்து கொண்டிருக்கிறேன் ஒரு நிகழ்ச்சியின் ஞாபகத்தில்.
அது சக்தியில் நான் தொகுத்து வழங்கிய கடைசி நிகழ்ச்சி ஞாயிறு வணக்கம் தாயகம் (March 24, 2019).
வழமையை விட அந்த அதிகாலை பொழுதில் உற்சாகம் அதிகமாக இருந்தது நான்கு மணிநேரம் என் குரல் ஓயவில்லை, IPL தொடர் செய்தி, சினிமா தகவல், Game show, Indian Stars interview அத்தனை கடந்தும் அதிகமான நேயர்களை காற்றலையில் இணைத்துக்கொண்ட சந்தோஷத்தில் நான் விடைபெற்ற நேரம் 9.56 am.
ஒருபோதும் நினைத்ததில்லை காலம் வேகமாக மாற்றத்தை தரும் என்று

😣

4. தொலைக்காட்சியில் நீங்கள் தொகுத்து வழங்கிய GOOD MORNING SRI LANKA அனுபவம் பற்றி

SHAKTHI Goodmorning Srilanka
இதை உச்சரிக்கும் போது மனதில் புதுவித சக்தி பிறக்கும், ஒரு புத்துணர்ச்சி, ஸ்டைலா சொன்னா கெத்து என்று சொல்லலாம்.
காதல்.com நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு வரமாக கிடைத்த ஒன்று.
என் கடமை நேர (shift time) மாற்றம் காரணமாக இந்த பயணம் நெடுந்தூரம் தொடரவில்லை.

ஆரம்ப நாட்களில் காலை நேர செய்திக்கு முதல் 15 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது goodmorning srilanka நிகழ்ச்சியிலே current news (sports, foreign) பற்றி பேசுவதற்கு (ரொம்ப பிடித்துபோன பகுதி) அதற்கு பிறகு தலைப்பு, இறுதியாக நேர்காணல் என்று ஒவ்வொரு காலைப்பொழுதையும் அர்த்தமுள்ளதாக மாற்றும் SHAKTHI goodmorning srilanka எனக்கு கிடைத்த மிகப்பெரிய அடையாளம்.
வெளியே வந்த போது அதுதான் அங்கீகாரம் என்று புரிந்துக்கொண்டேன்.

கஜமுகன் அண்ணா, உமா அக்கா இருவரும் நம்பிக்கையுடன் சந்தர்ப்பத்தை வழங்கி இருந்தார்கள். எனக்கு முதல் நிகழ்ச்சியை தர முயற்சி செய்து, கெமராக்கு முன்னுக்கு அழைத்து சென்ற பிரகாஷ் அண்ணா, தயாரிப்பாளர்கள் சியாமலா (இவங்க my favourite show producer), தினேஷ், சுதர்சன், தேவா, விசாகன், துஷா மற்றும் co presenters தர்ஷனா மலர், ஹம்சி, சிரோமி, ரத்திக்கா, ராகேஷ் மற்றும் துர்க்காவுக்கும் நன்றி.

5.ஊடகங்களில் குறிப்பாக வானொலி அறிவிப்பாளர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்ட தற்போது வாய்ப்புகள் உள்ளதா?

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான களமாக வானொலி இன்னும் இருக்கின்றது. சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயம் இருந்தாலும் அதை வேறு விதமாக இன்னொரு வடிவில் நிறைவேற்றலாம். ஒரு நாள் செய்தி வாசிப்பாளர் அல்லது அறிவிப்பாளரானால் போதும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.

திறமைகளை கொண்டு சிறந்த படைப்புகளை உருவாக்குங்கள். சிலரின் அல்லது சில இடங்களில் விருதுகளுக்காக அல்லது அங்கீகாரம் என்ற ஒன்றுக்காக மாத்திரம் படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அவை குறுகிய காலத்தில் மறைந்துவிடும் திறமையையும் மறைத்துவிடும்.

6.நீங்கள் தொழில் புரிந்த கெபிடல் வானொலியில் நீங்கள் வழங்கிய நிகழ்ச்சி பற்றி?

கடந்த may மாதம் நீ நான் இசை நிகழ்ச்சி மூன்று நாட்கள் தொகுத்து வழங்க சந்தர்ப்பம் கிடைத்தது. பாடல், கவிதை, request இது தான் concept. ஆனா இதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த நேரம் இந்திய பாடகி வாணி ஜெயராம் அம்மாவின் interview போடலாமே என்று அவர்களுக்கு அழைப்பினை ஏற்படுத்திய போது அவங்களும் பேசி இருந்தாங்க. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவருடனான நேர்காணல் மறக்க முடியாது.

காதலுடன் நிகழ்ச்சிக்கு புதுவடிவம் கொடுத்து நம் நாட்டு மற்றும் இந்திய கலைஞர்களுடனான பிரபலங்களின் காதலுடன் மற்றும் “இலக்கியா” என்ற பெயரில் 21 வயது விமான பணிப்பெண்ணின் காதல் தொடர் கதை, செய்தி, sports roundup, dubbing என்று பல இருக்கின்றன. குறுகிய காலம் என்றாலும் கெப்பிட்டலில் என் நிகழ்ச்சிகளை மறக்க முடியாது. சந்தர்ப்பம் தந்த பணிப்பாளர் விதுர்ஷன், மற்றும் ஷைலி, ரசூல் அண்ணா, ரஜிவ், வர்ணா, news and tv team என்று அனைவரையும் ஞாபகப்படுத்துவது சிறப்பு.

7. இப்போது வானொலிகளின் நிர்வாகங்கள் திறமையான அறிவிப்பாளர்களை விட பணியாளர்களை கவரும் கவர்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறப்படுவது உண்மையா?

கவர்ச்சி, இது வர்த்தக ரீதியில் பார்க்கும் போது சேவையை விஸ்தரிப்பதற்கான ஒரு அஸ்திவாரம் ஆனால் இது இங்கு சில வாரம் கடப்பது கடினம் என்பது எந்தவொரு நிர்வாகமும் அறிந்த ஒன்றே.

சில தலைமைத்துவம் தவறான பாதையில் செல்லும் போதும் திறமையானவர்கள் நல்ல நிகழ்ச்சிகளை தந்து மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி நிறுவனத்துக்கு உயிர் கொடுக்கின்றார்கள். யாரையும் நம்பி நேயர்களும், நிர்வாகமும் இல்லை அவர்களுக்கு தேவை தரமான நிகழ்ச்சிகள் மட்டுமே அப்படியான நிகழ்ச்சிகளை தந்து நேயர்கள் மனதை வெல்வதே ஊடகத்தின் கவர்ச்சி.

8.வானொலி தேசிய விருதுகள் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

நிச்சயமாக, விருதுகளும் எமக்கான அங்கீகாரம் தான் ஏற்கனவே கூறியதை போன்று நல்ல படைப்புகளுக்கு விருதுகள் வந்து சேரட்டும் விருதுகளுக்காக மட்டும் படைப்புகள் அல்லது நிகழ்ச்சிகள் வேண்டாமே. 2019 இல் அதிகமான விருதுகளை சக்தி வென்றது ஒரு மகிழ்ச்சியான தருணம்.

9.உங்களது குரலை நாம் எப்போது இனி வானலையில் கேட்கலாம்.

அவ்வப்போது கேட்கலாம் விளம்பரங்களில். வானலையில் என்று? காலம் பதில் சொல்லும்.

10.இலங்கையின் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் எமது இணைய தளம் பற்றி உங்கள் கருத்து?

உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். அன்புக்கு நன்றி. நான்கு நாட்கள் ரேடியோல நாங்க பேசல்லன்னா அடுத்த நாள் மெசெஞ்சர்ல உங்கட மெசேஜ் நாங்க பார்க்கிறோம்.

நம் நாட்டு கலைஞர்கள் பற்றிய உங்கள் தேடல் தொடர்கிறது மக்கள் உங்களை பல சந்தர்ப்பங்களில் தேடுகிறார்கள் நம்மவர்களின் search history அதில் lankatalkies இருப்பது மகிழ்ச்சி. உஙகளுடைய அன்பின் ஆதரவுக்கு நன்றி. இன்னும் பல புதுமைகளை நீங்கள் சேர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!