ரவானின் ஒரு நூலால் ஒரே மேடையில் ஒன்பது கவிதைகள்

எழுத்தாளனுக்கு உள்ள மிகப்பெரிய அங்கிகாரம் தனது நூல் தான்.அதுவும் தான் அனுபவித்த இயற்கையில் கிடைத்த உணர்வுகளை கவிதையாக தீட்டுவது சாதாரண விடயமல்ல.

ராவன் தர்ஷன் ஹட்டனை சேர்ந்தவர் . கவிதை என்றாலே கொள்ளை பிரியம்.இவரின் கவிதைகளுக்கு தற்போது உயிர் கொடுக்க வருகிறது நினைவோ ஒரு பறவை.

இந்திய எழுத்தாளர் ஷாலினி கார்த்திகேயன் இந்த நூலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சில தேடல்களின் விடை
சரி போதுமென்றா முடியும்?
அவ்விடை விதைக்குள்ளே
ஆயிரம் கேள்விகள் ஆலமரமாய் விரியும்.
-‘நினைவோ ஒரு பறவை’ தொகுப்பிலிருந்து.

நண்பர் ராவணன் தர்ஷனின் கவிதைகள் நூல் வடிவம் பெற்று வெளிவர இருப்பதை பெருமகிழ்வோடு வரவேற்கிறேன். ராவணனின் இந்த முகம் மிகுந்த ரசனையும், தேடலும் கொண்டது. இயல்பிலேயே சின்னஞ்சிறிய சந்தோஷங்களைக் கொண்டாடத் தெரிந்த இந்த மனிதரின் கவிதைகளும் அவரின் மனதையே பிரதிபலிக்கின்றன. இவரின் கவிதைகள் பயணிக்கும் போக்கும் ஒரு பட்டாம்பூச்சியின் பறத்தலைப் போலவே இலகுவாக மெல்லிய அதிர்வுகளை கடத்திச் செல்வதைக் காண முடிகிறது. அழுத்தமான கருத்து வீச்சுகள் இல்லாமலேயே மிக மென்மையாக பல உண்மைகளை அழகாக கவி பாடியிருக்கிறார் இந்த அசுர கவி.

அழகான மொழி வாய்ப்பதென்பது அரிது, அது ராவணனுக்கு சாத்தியப்பட்டிருப்பது அவரின் ரசனையையும் வாசிப்பில் அவருக்கு இருக்கும் நாட்டத்தையுமே பறைசாற்றுகின்றது.

தாயின் கரங்ளைப் பற்றியபடி உலகை வியக்கும் குழந்தையாய் இவரது கவிதைகள் பல வண்ணக் காட்சிகளைக் கண்டு தானும் வியந்து நம்மையும் வியக்க வைத்து விடுகின்றன.

கவிதைத் தொகுப்பின் இறுதி அத்தியாயமாக இடம்பெற்றிருக்கும் ‘பேரின்ப லஹரி’ காதல் உன்மத்தத்தின் வினையும் விளைவுமாக அழகாகத் தொடுக்கப்பட்டுள்ளது.

‘The Butter fly counts not days but moments and has time enough’
-Tagore.

பட்டாம்பூச்சியின் பறத்தல் ஓரிடத்தில் மென்மையாகவும் அதே சமயம் உலகின் மற்றோர் புள்ளியில் பெரும்புயலொன்று சம்பவிக்கக் காரணமாகவும் அமைந்துவிடுவது போல இவரின் கவிதைகளின் தாக்கமும் வாசிக்கும் மனதின் புரிதல் பொறுத்து அமைந்திருக்கும் என்பது உறுதி.

உளங்கனிந்த வாழ்த்துகள் ராவணன் தர்ஷன். என்று தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

எதிரவரும் ஜனவரி 5 மாலை 4 மணிக்கு கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியீடு நடக்க சூரியன் வானொலி லோஷன் தலைமை தாங்குகிறார்.

கெளரவ அதிதியாக வெண்பா புத்தக நிலைய நிறுவனர் கவிஞர் சுதர்சன் வெளியிட வரவேற்புரை, நயவுரை, மதிப்புரை, கருத்துரை, சிறப்புரை, பொழிப்புரை, நன்றியுரை இன்னும் பல உரைகளைக் கேட்டு உறைந்து கவிக் கடலில் கரைந்து கவிப்பாட இலங்கை கலைத்துறை பிரபலங்கள் வருகிறார்கள்.

தாரணி ராஜசிஙகம் , தவ சஜிதரன் , பிரதாஸ் S அஃன்யா , வருன் துஷ்யந்தன் , சிந்துஜன் நமஷய் , கிங் ரத்னம் மற்றும் எல்ரோய் என்று மிகப்பெரிய கலை குடும்பம் இந்த நூலை பற்றி பேசப்போகிறார்கள்.

சபாஷ் ராவணா சரியான தெரிவு ,சரியான அதிதிகள் எல்லாம் இது வரை எதிர்ப்பார்த்தது இதை தான்.இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

விழா வெற்றி பெறட்டும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!