சக்தி வானொலியின் பார்த்திபா திரைப்படத்தை தொடர்ந்து சக்தி டிவியின் தயாரிப்பில் அதிரா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
சுதர்ஷன் கனகராஜாவின் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது.
இப்படத்தில் விஜய் சாரதி நடித்திருக்கிறார் ,கூடவே தர்ஷன் பிரேம்காந்த்,பிரசாந்தன் ,பூஜா
ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஹானி நயகராவின் இசையில் பாலா மற்றும் லால் விஜிதகுமார ஒளிப்பதிவை கவனிக்கிறார்கள்.
மனோஜ் ராஜனின் படத்தொகுப்பில் புத்திக திசாநாயக்கவின் கிராபிக்ஸ் வேலை ஆந்திராவுக்கு வலுசேர்க்கிறது.
பானுக பெர்ணாந்துவின் கலை நயத்தில் அதிரா அழகாகுகிறது.
பவதரனனின் சிறப்பு ஒலி கலவைக்கு ரங்கன திலகவர்தன ஒப்பனை செய்துள்ளார்.
பார்த்திபாவை போன்று அதிராவும் பேசப்பட்டால் இலங்கையின் திரைப்படத்துறையை மஹாராஜா குழுமம் நிச்சயமாக காப்பாற்றும்.
படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.