இலங்கையின் சக்தி வானொலியில் பேசப்பட்ட அறிவிப்பாளர் ராஜ் மோகன்.
தமிழகத்தில் இருந்து இலங்கை வந்தவர் கடைசியில் இலங்கைக்கு மருமகன் ஆகிவிட்டார்.
அவரது மனைவி கவிதா ராஜ்மோகன் நாம் அறிந்த வானொலி பிரபலம். யூ டியூபில் அசத்திய ராஜ்மோகன் தமிழகத்தில் தவிர்க்க முடியாத மேடை பேச்சாளாராக மாறினார்.
பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை தன்னமபிக்கை பேச்சு மூலம் தன் வசப்படுத்தியவர்.
முதற் தடவையாக வெள்ளி திரையில் இயக்குனராகிறார்.அதுவும் ரோக் போர்ட் என்டேர்டைன்மெண்ட் முருகானந்தனின் தயாரிப்பில் இயக்கவுள்ளார்.
யூ டியூபில் அசத்தும் BLACK SHEEP குழுவினர் படத்தில் நடிப்பதாக தகவல்.
எப்படியும் தன்னம்பிக்கை நிறைந்த படமாகா இருக்க போகிறது.கலக்கல் கூடவே இருக்கும் ராஜ்மோகன் என்பதால் தமிழுக்கு வெறித்தனமான இடம் கொடுத்திருப்பார்.
பொறுத்திருந்து பார்ப்போம். இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.