கெளதமி 5 தேசிய விருது
என் வாழ்க்கையில் கெளதமி தொலைக்காட்சி தொடர்
மறக்கவே முடியாது!!!
ஒரு வருடங்களுக்கு மேலாக படப்பிடிப்பு பயணம். இக் கதாபாத்திரத்திற்கு என்னை தெரிந்து சந்தர்ப்பத்தை கொடுத்த இயக்குனர் அண்ணா கோனேஸ்வரன் அவர்களுக்கு எனது நன்றிகள்.
சக நடிகை சிறீதேவி அறிமுகமானது என்னோடு தான் ஆனால் இரண்டு வருடத்தில் தொடர்ந்து 05 படைப்புகள் சிறந்த நடிகை தேசிய விருது.
றொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு உங்ஙளோடு பணியாற்றியது நல்ல திறமையான அர்ப்பணிப்பு உள்ள நடிகை நீங்கள்
நல்ல திறமையுள்ளது தொடர்ந்து பயணியுங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள் இன்னும் பல தடவைகள் தேசிய விருதுகள் பெறுவீர்கள்.
உதவி இயக்குனர்கள்முபாரக் அண்ணா மற்றும் சங்கீத் உங்கள் இரண்டு பேருக்கும் சிறந்த நன்றிகள் படப்பிடிப்பு தளத்தில் நல்ல நண்பனாக சகோதரனாக இருந்தீர்கள் எனது தனிப்பட்ட நன்றிகள்.
ராஜ் நண்பன் நல்ல பண்புகள் கொண்ட பல் திறமை அர்ப்பணிப்பு கலைஞன் பாடலாசிரியர் விருது வாழ்த்துகள் மச்சி. .
இலங்கையில் சிறந்த இசையமைப்பாளர் டிரோன் அண்ணா “அழகான பனித்துளியே… சூப்பர் மெலோடி அண்ணா நன்றிகள்.
#மற்றும்
தயாரிப்பாளர்கள், அனைத்து கலைஞர்கள், மூத்த கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் ,
இசையமைப்பாளர், பாடகர்கள், பாடலாசிரியர்,ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், ஒப்பனை கலைஞர்கள்,
யாரையாவது குறிப்பிட மறந்து இருப்பினும் அனைவருக்கும் எனது இதயத்தின்ஆழத்தில் இருந்து நன்றிகள்.
என்ன தான் இருந்தாலும் நான் நடித்த தொடர் இது என்பதில் இப்போ ஒரு பெருமை உண்டு.
ஒரு வருடம் எப்படி போனது என்று தெரியவில்லை ஆனாலும் பல பல மறக்க முடியாத அனுபவம் இறைவனுக்கு நன்றிகள்.
எல்லா புகழும் இறைவனுக்கே❤️
இந்த தொலைக்காட்சி தொடர்
சிறந்த ஐந்து பிரிவுகளாக விருதுகளை தட்டிக் கொண்டுள்ளது றொம்ப றொம்ப சந்தோஷம்.
சிறந்த இயக்குனர்
சிறந்த நடிகை
சிறந்த பாடலாசிரியர்
சிறந்த பாடகி
சிறந்த இசையமைப்பாளர்
அன்புடன்.
ஜெறாட் நோயல்.இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.