SS ப்ரோடுக்ஷன் தயாரிப்பில் ,ரெஜி செல்வராசா ஒளிப்பதிவில் மற்றும் தொகுப்பில் ,ஷமீல் J ஷாஸ்னா ஷமீல்நடிப்பில்,சத்தீஸ்கந்த
தம்பிரெட்ணம் வரிகளில் ,Shameel J குரல் மற்றும் இசையில்
Sri ஷங்கர் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் #Theera_Kadhal காணொளிப்பாடலின்
முதற்பார்வை மற்றும் டீசர் இனை , நெடுஞ்சாலை , மாயா புகழ் பிரபல தென்னிந்திய நடிகர் Aari Actor அவர்கள் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.
ஷமீலின் தயாரிப்பில் பல பாடல்கள் வெளிவந்தாலும் இது அவருக்கு ஒரு சிறப்பு வாய்ந்த பாடல்.
அநேகமான பாடல்கள் வெளிவந்தாலும் கணவன் மனைவியாக பாடல்கள் வெளிவருவதில்லை.இருவரும் ஜோடி சேர்ந்து இந்த பாடலை தர காத்திருக்கிறார்கள்.
இந்த பாடலின் படப்பிடிப்பு தொடர்பாக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஷமீல் தனது முகப்புத்தக பக்கத்தில் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி இட்ட ஒரு பதிவிலிருந்து
எல்லா புகழும் இறைவனுக்கே
காலநிலை கை கொடுக்காது என அனைவரும் எச்சரித்தபோதும் , எமது படப்பிடிப்பு நாட்களில் , அதை தலைகீழாக மாற்றி எமக்கு உதவி புரிந்த இறைவனை எவ்வாறு புகழ்வது..
Sri Shanker மற்றும் Shameel J இன் SS production தயாரிப்பில் , இரண்டு பாடல் படப்பிடிப்புகள் கடந்த தினங்களாக நுவரெலியாவில் இல் இடம்பெற்றன.
இதில் பங்களிப்பு செய்த..
எமது இணை தயாரிப்பாளர் Eswar Kumar , அவர் பற்றி…
சில காரணங்கள் சரியான பணம் கைகளில் கிடைக்கப்பெறாத சூழலில் உடனடியாக சிரமம் பாராது எமக்கு அவர் உதவி வழங்கிருந்தார் என்பதை இவ்விடத்தில் பதிவிடுவது சந்தோஷமானது.
ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர் Reji Selvarasa , எல்லையற்று விரியும் அனைத்தையும் தனது வில்லையில் கொண்டு வந்துவிடும் கலைஞர். பாடல்களின் பலம் .. அனைத்தையும் தாண்டி நல்ல மனிதர். நான் சொல்வதைவிட படைப்புகள் அவர் பற்றி உலகம் முழுதுமே பேசும்
Krishanth KS இவர் Sri Shanker கு மாத்திரமல்ல எனக்கும் சகோதரரே. எந்த அசதியும் பாராமல் , வாகனத்தை வானம் வரை செலுத்தியவர். நமது படைப்பு எனக்கருதி எதிர்பார்ப்பின்றி எமக்காக உழைத்தவர்.
நண்பர் Pathma Rock , பாடலின் தயாரிப்பு மேற்பார்வையாளராக, ஒளிப்பதிவாருக்கு உதவியாளராக, அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தார். நற்புக்கு ஒரு வரி உதாரணம்.
மனைவியின் சகோதரர் Mohammad Shahin , மிகப்பெரிய பங்கு. எனது மகனை தன்னோடு வைத்துக்கவனித்துக்கொண்டது. மனதளவில் அது எமக்கு பெரிய உதவியாக அமைந்திருந்தது.
Scanowa Fernando Harzi , இறுதித்தருணம் வரை எம்மோடு கைகோர்த்திருந்தார், சந்தர்ப்பசூழ்நிலை கைகொடுக்கவில்லையென்றாலும், இப்பாடலில் அவருக்கும் சம்பந்தம் உண்டு.
Mithuna Mithu , என்ன உதவிகள் வேண்டுமானாலும் புரிவதற்கு தயாராக இருந்தார். அந்த மனநிலையே எமது படைப்பின் வெற்றியை இன்னும் பலப்படுத்தியது.
Satheeskanth Thambiretnam இப்பாடல்களில் ஒன்றின் பாடலாசிரியர் , அற்புதமான வரிகளை வழங்கியவர், தேசியவிருது பெற்ற கலைஞர்.
Puvanesh Nagenthiran Raj நாங்கள் வேறு தளத்தில் இருந்தபோது , எமக்கான பரிமாற்ற வேலைகளை சிரமம் பாராது செய்துகொடுத்து, எமது படப்பிடிப்புக்களை சீராக இடம் பெற உதவிய உயித்தோழன் .
Jerushan ..எனது முகாமையாளர், இத்துறையில் , எனது முதுகெலும்பாக செயற்படுபவர் .. சிறப்பான வழிநடத்தல் .. இசையில் மட்டும் கவனம் செலுத்தி , மற்றைய அனைத்தையும் சரியாக எடுத்து செல்பவர்.
இத்தோடு சேர்த்து.. யாருடைய பெயரும் குறிப்பிட மறந்திருப்பின் மன்னிக்கவும்.
இவ்வனைவருக்கும் Shazna , Sri Shanker மற்றும் நான் உள்ளடங்கலான மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
வெகுவிரைவில் பாடலுடன் சந்திக்கிறோம்.
இவ்வாறு அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி இட்ட ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்
நாமும் இந்த பாடலுக்கான ஒரு விமர்சனத்தையும் வழங்கியுள்ளோம்.தொடர்ந்தும் நம் நாட்டு படைப்பாளிகளுக்கு நாம் வழங்கி வரும் இந்த ஆதரவு இதுபோன்ற இன்னும் ஏராளமான பாடல்கள் வெளிவர உதவும்.
ஷமீல் மற்றும் பாடல் குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.