விருது பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஸியா இயக்கும் TRIP OF HELL இலங்கையின் முதலாவது த்ரீல் இணைய தொடரின் முதலாவது வெளியீடு எதிர்வரும் 8 ஆம் திகதி VIU APP இன் மூலம் இடம்பெறவுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை கலையுலகத்தில் ஏற்படுத்தியுள்ள இவ் தொடர் கேபிடல் ப்ரொடக்ஷ்ன் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
இவ் தொடரின் மூலம் மேலும் பல நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக இயக்குனர் ஸியா பலருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.உமேஷ் குமார் ,ஜிதேந்திரா உள்ளிட்ட பலர் இவ் தொடரில் நடித்துள்ளனர்.
குறிப்பாக நமது நாட்டில் இதுப்போன்ற புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் நாமும் இயக்குனர் ஸியா உட்பட குழுவினருக்கு வாழ்த்துவோம்.
இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.