“கவி அரசு” குலராஜ்க்கு கம்போடிய அரச விருது

தமிழ் படைப்பாளிகள் வட்டத்தில் நன்கு அறிப்பட்ட இளம் படைப்பாளி மகேந்திரன் குலராஜ் அவர்கள்.

கவிஞர், பாடலாசிரியர் எழுத்தாளர் என பன்முக ஆற்றல் கொண்ட இளம் படைப்பாளி 2009 தனது பதினொராவது வயதில் எழுத ஆரம்பித்த இவர் வைரம் (2011) சீரழிந்து போகும் தமிழரின் பண்பாடு (2012) ஆகியில இரு கவிதைத் தொகுப்புக்களை சிறுவயதிலேயே வெளியிட்டவர்.

தனது பதினாக்காவது வயதுலேயே தனது இரண்டாவது கவிதை நூலுக்காக இலங்கை, யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபையிடம் “கவி அரசு” என்ற பட்டத்தை இளம் வயதிலேயே பெற்றவர். தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான மூன்றவது ஈழத்துக் கவிஞர் மற்றும் தென்னிந்திய சினிமாவில் இளவயது பாடலாசிரியர் என்ற பெருமைக்கும் உரியவர்.

கம்போடியா நாட்டின் சியம்ரீப் மாநில கலாசார மற்றும் பண்பாட்டுத்துறையுடன் இணைந்து உலகத் தமிழ் கவிஞர்களின் 2 நாள் மாநாடு 21, 22ம் திகதிகளில் கம்போடியாவில் நடைபெற்றது. . இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா உள்பட 40 நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட தமிழ் கவிஞர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக கம்போடியா நாட்டின், சியம்ரீப் மாநில கலை மற்றும் கலாச்சார அமைச்சர் கலந்து சிறப்பித்தார் கம்போரிய அரசினால் 40 கவிஞர்களுக்கு கம்போடிய கலை மற்றும் கலாச்சார அமைச்சால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படது. கவிஞர் மகேந்திரன் குலராஜ் அவர்களும் கம்போடிய அரசின் சியாம் ரிப் மாநில கலை மற்றும் கலாச்சார அமைச்சரின் கரங்களால் கம்போடிய அரசின் விருதினைப் பெற்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!