YOU TUBE இல் உலகம் சுற்றும் ஊடக ஜோடி

வானொலி பத்திரிகை தொலைக்காட்சி போன்ற ஊடகத்துறை பல பரிமானங்களைக் கடந்து தற்பொழுது சமூகவலைத்தளங்களுடன் போட்டி போட வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக தொலைக்காட்சியின் இடத்தை YOU TUBE எனும் வலைத்தளம் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றது எனலாம்.

இணையத்தில் நாம் தேடும் தகவல்களை திரட்டுவதற்கு கூகில் தேடுதளம் எந்தளவூ முக்கியத்துவத்தைப் பெறுகின்றதோ காணொளிகளைத் தேடிப் பெற்றுக்கொள்வதில் YOU TUBE வலைத்தளம் முக்கிய இடத்தை பெறுகின்றது.

https://www.youtube.com/user/dilsdev

இதேபோல் உலக அளவில் YOU TUBE எந்த அளவில் பிரபல்யம் அடைந்துள்ளதோ இலங்கையிலும் மக்கள் மத்தியில்
YOU TUBE வலைத்தளம் மிகவூம் பிரபல்யம் அடைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. விசேடமாக சிங்கள மொழியில் பல
YOU TUBE படைப்பாளர்கள் உருவாகியூள்ளனர்

இந்நிலையில்இ இலங்கையில் ஊடகத்துறையில்; கடமையாற்றும் ஒரு தமிழ் தம்பதியினரும்
YOU TUBE தடம் பதித்து வருகின்றனர்.

இருவேறு ஊடகங்களில் பணிபுரியூம் குறித்த தம்பதிகளான டில்ஷாட் தேவதாசன் மற்றும் அஜிதா ஆனந்தன் ஆகிய குறித்த இருவரும் தமது தனிப்பட்ட பதிவூகளை காட்சிப்படுத்தி தரவேற்றம் செய்து
YOU TUBE வலைத்தளத்தில் வலம் வருகின்றனர்.

தென்னிந்திய தமிழ்
YOU TUBE பதிவாளர்களின் வருகையால் இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ்
YOU TUBE பதிவூகள் மிகவூம் குறைவாகவே காணப்படுவதாக தெரிவூக்கும் இவர்கள் நமது நாட்டிலிருந்து தமிழ்
YOU TUBE பதிவூகள் இன்னும் அதிகமாக வெளிவர வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.

தமக்கு தெரிந்தவற்றையூம் தமது அனுபவத்தையூம் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் இவர்கள் எதிர்வரும் காலங்களில் மேலும் பல வெளிநாட்டு பயணப்பதிவூகள் தகவல்கள் மற்றும் அனுபவங்களை தரவேற்றம் செய்யவூள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இவர்களின் இந்த முயற்சி மேலும் வெற்றி பெற www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!