உலக தரம் வாய்ந்த வியாபார நாமங்களில் இன்று தமிழர் பெயர் சொல்லும் அளவில் உயர்ந்திருப்பது லைக்கா நிறுவனம்.
தொலைக்காட்சி ,தொலைபேசி ,வானொலி ,வணிகம் என சகல துறைகளிலும் கால் பதித்த லைக்கா தென்னிந்திய சினிமா துறையிலும் முதலிடத்தில் உள்ளது.
லைக்காவின் இந்த அபார வளர்ச்சிக்கு பலரின் உழைப்பு இருந்தாலும் நிறுவன தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தொலைநோக்கு பார்வையே காரணம்.
இந்த தொலைநோக்கு பார்வையின் அடுத்த கட்டமே இலங்கையில் லைக்கா கால்பதித்த தருணம்.
உலகளாவிய ஊடக வலையமைப்புகளில் இன்று க்ளிக்கவும் பேசப்படுகிறது.ஆகவே தான் இலங்கையில் பேசப்பட்ட மிகப்பெரிய ஊடக வலையமைப்பான EAP மற்றும் EBC நிறுவனங்களை லைக்கா கொள்வனவு செய்தது.
மறைமுகமாக லைக்காவிற்கு அரசியல் மேடைகளில் விமர்சித்தோர் நாளடைவில் பகிரங்கமாக பேச ஆரம்பித்தனர்.
அனைவரும் லைக்கவை பற்றி பாரதூரமான விமர்சனங்களை முனவைக்கும் போது அதற்கு பதிலடியாக லைக்காவின் மாபெரும் ஒன்று கூடல் ஓநாடாரை அதுவும் கொழும்பின் மிகப்பெரிய நட்சத்திர விடுதியாக தாஜ் சமுத்ராவில் நடத்தி அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உலகில் முதலிடமும் இலங்கையில் முதலிடமும் எமக்கே
லைக்கா ஒன்று கூடலில் முடிவுக்கு வந்துள்ளார் நிறுவன தலைவர் சுபாஸ்கரன்.
எங்கள் எதிர்காலம் ,எங்கள் தொலைநோக்கு பார்வை என்ற தொனிப்பொருளில் நடந்த ஒன்று கூடலில் சுவர்ணவாஹினி ,கொன்கோர்ட் கிராண்ட் ,சவொய் ,சுவர்ணமஹால் ,ETV ,ஹோட்டல் சபாயா போன்ற நிறுவனங்களின் ஊழியர்களும் ஆதவன் குழுமத்தின் ஊழியர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
நிறுவனத்தின் ஊழியர்களுடன் மிகவும் சாதாரணமாக பேசி செலஃபீ எடுத்துக்கொண்ட நிறுவன தலைவர் சுபாஸ்கரன் தனது தலைக்கனமில்லாத மனப்பக்குவத்தை நிரூபித்தார்.
லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் உள்ளிட்ட அனைத்து லைக்கா குடும்ப உறுப்பினர்களுக்கும் www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.