இலங்கை ஊடகங்கள் பல தற்போது தங்கள் ஊடக தர்மத்தை மறந்து செயற்படுவது போன்று நமக்கு தோன்றுகிறது.
இலங்கையில் வானொலிகள் ,தொலைக்காட்சிகள் எத்தனையோ இருக்கிறது.எல்லா வானொலிகளும் 24 மணி நேரம் தனது சேவையை வழங்கி வருகிறது.
தொலைக்காட்சிகளும் தங்கள் சேவையை நேயர்களுக்கு இரவு பகல் பார்க்காமல் வழங்கி வருகிறது.
ஆனால் துரதிஷ்டவசமாக எமது இலங்கை ஊடகங்கள் இந்திய நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்துகிறது.
விஜய் டிவியின் பிக் போஸ் என்ற சமூக சீரழிவு நிகழ்ச்சியை இலங்கை ஊடகங்கள் வெளிப்படையாக விளம்பரம் செய்கிறது.
இந்த விளம்பரத்தின் மூலமாக பிக் போஸ் நிகழ்ச்சி தெரியாதவர்களும் பார்க்க தோன்றும் விதத்தில் இவர்களது விளம்பரம் இருக்கிறது.
ஒவ்வரு நிகழ்ச்சிகளிலும் எதாவது ஒரு இடத்தில பிக் போஸ் நிகழ்ச்சியை கூறி நேற்றைய நாளில் நடந்தவற்றை கூறி நேயர்களை பார்க்க வைக்கிறார்கள்.ஆனால் இப்படி விளம்பரப்படுத்துவதன் மூலமாக தங்களுடைய ஊடகங்களின் இரவு 9 .30 நிகழ்ச்சிகளை நேயர்கள் பார்க்க ,கேட்க மாட்டார்கள் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
கோடி கணக்கில் செலவு செய்து உலக தமிழர்களை தொலைக்காட்சி முன் அமரவைத்து சமூகத்தை சீரழிக்க வேண்டிய சகல காட்சிகளையும் காட்டி பில்லியன் கணக்கில் வருமானம் தேடும் இந்த உலக பிரபல தொலைக்காட்சியை நாம் ஏன் விளம்பரம் செய்ய வேண்டும் என்று யாரவது யோசித்தால் நல்லது.
நமது நாட்டின் ஏன் அவரவர் ஊடகங்களில் ஆயிரம் திறமையவர்கள் இருக்கும் போது அக்கார்களை பற்றி எழுதாமல் ,பேசாமல் எங்கோ யாருக்காகவோ பேசுவது நிகழ்ச்சிகளில் பேச வேறு தலைப்பின் தட்டுப்பாடே.
நாம் மாறவேண்டும்.நாம் மாறாவிட்டால் இன்னும் பல வருடங்களின் பின்னரும் நாம் இந்திய படைப்புகளை நம்பி இருக்க வேண்டி இருக்கும்