
ஒரு படைப்பாளிக்கு சிறந்த அங்கிகாரம் அவர்களுக்கு கிடைக்க கூடிய விருதுகளே.
அந்த வகையில் இலங்கை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இலங்கை கலைஞர்களை கெளரவித்து வருகிறது.
சிங்கள நாடகம் ,மற்றும் சிங்கள தொலைகாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் விண்ணபித்து அவர்களுக்கு விருது வழங்கும் வைபவம் இம்மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது .
இவ் விருது விழாவில் பரிந்துரைக்கபட்டவர்களுக்கான சிறப்பு நிகழ்வு அன்மையில் நடந்தது .
சக்தி தொலைக்காட்சியை சேர்ந்த ஜெபிரி ஜெபதாசன் மற்றும் கோகுல்நாத் ஆகியோர் சிறந்த செய்தி வாசிப்பாளர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள விழாவில் யார் வெற்றியாளர் என்பது தெரியவரும்.
பரிந்துரைக்கபட்ட சக்தி தொலைக்காட்சியை சேர்ந்த ஜெபிரி ஜெபதாசன் மற்றும் கோகுல்நாத் ஆகியோருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.