இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி செயலகம் முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ள அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்களும் கலந்துகொண்டார்.இதன்போது ஜனநாயக மக்கள் முன்னணியின் தெஹிவளை அமைப்பாளர் இம்திசன் நவாஸ் உம் கலந்துகொணண்டார்.பார்ப்பதட்கு தல அஜித் போல் இருந்த அவர் பலரையும் கவர்ந்தார்.
வாழ்க்கைச் செலவை அரசாங்கம் தாங்க முடியாத அளவிற்கு உயர்த்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் இதன்போது தெரிவித்தனர்.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பிற்கு பேரணியாக வருகை தந்து, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று (15) மாலை ஆர்ப்பாட்த்தை முன்னெடுத்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், ‘நாடு நாசம் – நாட்டைக் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த எதிர்ப்பு பேரணியில் ஐக்கிய ஊழியர் சங்கம், ஐக்கிய மகளிர் அமைப்பு, சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.