கடந்த மார்ச் ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
இலங்கையிலும் இது தொடர்பாக பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது.
குறிப்பாக ஊடகங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல நிகழ்சிகளை நடத்தியது.
இதில் நாம் தொலைகாட்சி சேவைகளை சொல்லியே ஆக வேண்டும்.அதுவும் சகோதர சிங்கள மொழி ஊடகங்கள் பெண்களை போற்றும் விதத்தில் பிரதான செய்திகளை இரு பெண்களை கொண்டு வாசிக்க ஏற்பாடு செய்திருந்தனர்.ஆனால் எமது தமிழ் ஊடகங்கள் அனைத்தையும் மறந்துவிட்டதாக மக்கள் கருதுகின்றனர்.
இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்து இனி வரும் காலங்களில் நாம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சி எடுப்போம்.
இரு பெண்களை கொண்டு வாசிக்க ஏற்பாடு செய்திருந்த ஹிரு,ருபவஹினி,சிரச தொலைகாட்சிகளுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.