மாதவனின் SUNDAY TODAY வெளியாகியது

நமது நாட்டில் எத்தனையோ இயக்குனர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு சரியான தளம் கிடைத்தால் ஜெயித்து விடுவார்கள்.

அந்த வகையில் இயக்குனர் மாதவன் மஹேஸ்வரனுக்கு மிக பெரிய அங்கீகாரம் தான் Dialog ViU வின் தமிழ் இணைய நாடகத் தயாரிப்பு.

இலங்கையில் தமிழ் தொலைக்காட்சி நாடக முயற்சிகள் அருகி வருகின்ற இச்சூழ்நிலையில் Dialog ViU வின் தமிழ் இணைய நாடகத் தயாரிப்பு முயற்சியானது வரவேற்க்கத் தக்கதும் மகிழ்ச்சி தருவதுமாயுள்ளது.

அவர்களின் புத்தம் புதிய தயாரிப்பே மாதவன் மஹேஸ்வரன் இயக்கத்திலும் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் , பேர்ழிஜா மற்றும் பலரின் நடிப்பிலும் ஜீவானந்தன் ராமின் இசையிலும் வெளிவரவுள்ள SUNDAY குறுந்தொடர்.

இலங்கையில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட சுயாதீன நாடகத் தொடர் SUNDAY ஆகத்தான் இருக்கும். எதிர்வரும் பொங்கல் தினம் முதல் Dialog ViU செயலி மூலமாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கும் இத் தொடரை எழுதி இயக்கித் தொகுத்தும் இருக்கிறார் மாதவன்.

ஏற்கனவே பல குறும்படங்கள் மூலம் பல விருதுகளை வசப்படுத்தியிருக்கும் மாதவன் “சொப்பன சுந்தரி” எனும் முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் ஒன்றையும் இயக்கித் தொகுத்திருக்கின்றார். திரையரங்குகளில் முடக்கம் அகற்றப்பட்டதும் ரசிகர்களிற்கு சிரிப்பு விருந்தளிக்கக் காத்திருக்கும் மாதவனும் அவர் நண்பர்களும், இவ் இடைவேளையில் தரும் விறுவிறுப்பான சிறப்பு விருந்தே SUNDAY.

ஒரு கொலை விசாரணைத் த்ரில்லரான SUNDAYயில் பிரதான பாத்திரமேற்றுக் குற்றப்புலனாய்வளராக அசத்தியிருக்கிறார் பேழிஜா. இலங்கை மண்ணின் புகழ் பூத்த நடிகர் தர்ஷன் தர்மராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களோடு இணைந்து ஜோயல், நரேஷ், வருண், தனுஷ், திலக்ஷி என ஒரு இளைஞர் பட்டாளமே நடித்திருக்கிறது.

கடந்த வருட ஆரம்பத்திலேயே இத்தொடரைப் படமாக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் நாடு முற்றுமுழுதாக முடக்கப்பட்டிருந்தமையினால் மே மற்றும் ஜூன் மாதங்களிலேயே படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டது. காட்சியமைப்பில் சமல் விக்கரமசிங்க பணியாற்றியுள்ளதோடு கலையில் லக்ஷ்மனும் ஒப்பனையில் மேலிஷாவும் பணியாற்றியுள்ளனர். அனைவரின் அளப்பரிய உழைப்பின் ஆதாரமாக பொங்கல் தினத்தன்று வெளிவருகின்ற SUNDAY நிச்சயம் ஒரு புது அத்தியாயத்தின் ஆரம்பமாக இருக்கப்போகிறது.

தவறுகளின் நடுவே தொலைந்து போன ஒரு மரணம் போடும் புதிர்களைக் குற்றப் புலனாய்வாளர் காஞ்சனா ராவண் உடைத்தெறியும் விறுவிறுப்பான குறுந்தொடரான SUNDAY நிச்சயமாக இலங்கை தமிழ் சினிமாவின் இன்னுமொரு உத்வேகம் படைப்பாக இருக்கப் போகிறது. இத்தொடர் ரசிகர்களின் பெருத்த வரவேற்பைப் பெறவும் இதே அணியினர் உருவாக்கியிருக்கும் சொப்பன சுந்தரி திரைப்படமும் பலத்த வெற்றியைப் பெறவும் ரசிகர்களோடு இணைந்து நாமும்
வாழ்த்துகின்றோம்.

நாட்டின் பிரதான தமிழ் ஒளி ஊடகங்களே சுயாதீனத் தயாரிப்புகளிற்கு நிதி வழங்கத் தயங்கி, பெரும்பாலும் பிறதேசத்துக் கதைகளை மறு ஒளிபரப்புச் செய்யும் நடைமுறை உச்சத்தில் இருக்கும் கால கட்டத்தில் இலங்கையில் சுயாதீனப் படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்கள் மூலமாகப் புது ஆக்கங்களை உருவாக்கி சந்தைப்படுத்த விழையும் Dialog ViU குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

இன்றே Dialog ViU செயலியைத் தரவிறக்கி SUNDAY உட்பட பல இலங்கைப் படைப்புகளைக் கண்டு களியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!