கில்மிஷாவை நிராகரித்த இலங்கை தமிழ் ஊடகம்காலை வாரியவர் வாழ்த்து சொல்வது மகிழ்ச்சி

கில்மிஷாவின் வெற்றி தொடர்பாக வாழ்த்துக்கள் குவியும் நேரத்தில் கில்மிஷாவை நிராகரித்த இலங்கை தமிழ் தொலைக்காட்சி தொடர்பாக அதிர்ச்சி தகவல் ஒன்றை இசை கலைஞ்சர் விபீஷன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

நம் நாட்டு ஊடகமொன்று நடாத்திய சிறுவர்களுக்கான பாடல் போட்டியின் ஊர் ஊராக சென்று நடாத்திய குரல் தெரிவுச்சுற்றுக்களின் போது இவர் அடுத்த சுற்றுகளுக்கு தெரிவாகினாரா இல்லையா என்ற முடிவுகளே சொல்லாமல் தட்டிக்கழிக்கப்பட்ட ஒருத்தி இன்று இன்னொரு நாட்டு ஊடகத்தில் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கிறாள்.

அந்த போட்டியின் அடுத்த சுற்று தெரிவுக்கான முடிவு தெரியாமல் இவள் பெற்றோர் அடைந்த வேதனை சொல்லிலடங்காது அதை நேரே அனுபவித்திருக்கின்றேன்.

இவ்வெற்றியை குறிப்பிட்ட நம் ஊடகத்தின் குறித்த நிகழ்ச்சி தயாரிப்பாளரும் தனிப்பட்ட முகப்புத்தகத்தில் வாழ்த்தியிருப்பதும் மிக்க சந்தோசம்.

அவளுக்கு உள்ளூர்ல சாதனை புரியாமல் உலக அளவில் சாதனை செய்யவேண்டுமென இறைவன் எழுதி இருக்கிறார் இது போதும் அவர்களுக்கு செய்தி சொல்ல, வாழ்த்துகள் டீ செல்ல கிச்சுக்குட்டி..

என்று பதிவிட்டுள்ளார் . வெற்றி பெற்ற கில்மிஷாவுக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!