உடன்பிறந்த சகோதரர்களை இழந்தபோது கூட, இந்த அளவு சோகத்தில் நான் ஆழ்ந்ததில்லை.
BH அப்துல் ஹமீது இரங்கல்

மறைந்த மூத்த கலைஞ்சர் கலாபூஷனம் சந்திரசேகரன் அவர்களது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .

இன்று-தாங்க முடியா, சோகம் நிறைந்த நாளாகவே விடிந்தது.

சில நாட்களாகவே உடல் நலம் குன்றிய நிலையில், மதுரை மீனாட்சி மிஷண் வைத்தியசாலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, எனது பால்ய நண்பன், நாடறிந்த நல்ல கலைஞன் கே.சந்திரசேகரன் சற்று முன்னர் மீளாத் துயிலில் ஆழ்ந்த அதிர்சிச் செய்தி வந்தது.

உடன்பிறந்த சகோதரர்களை இழந்தபோது கூட, இந்த அளவு சோகத்தில் நான் ஆழ்ந்ததில்லை. சகோதரி செல்விக்கும், அன்புச் செல்வங்கள் சிரஞ்சீவ், சுதர்மன்,சிந்தூரன், மற்றும் அன்பு மருகள்மார் செளமயா,சரண்யா, பேரக்குழந்தைக்கும் எனது குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
என் உடன் பிறவா சகோதரன் சந்திரசேகரனது ஆன்மா நற்பேறு அடையப் பிரார்த்தனைகள்.

அமரர் K. சந்திரசேகர் அவர்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்….

என சிரேஷ்ட மூத்த அறிவிப்பாளர் BH அப்துல் ஹமீது தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்

உடன்பிறந்த சகோதரர்களை இழந்தபோது கூட, இந்த அளவு சோகத்தில் நான் ஆழ்ந்ததில்லை.
BH அப்துல் ஹமீது இரங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!