இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் தமிழ் முற்போக்கு முன்னணி தலைவர் மனோ கணேசன் அவர்கள் சபையை அதிரவைக்கும் பேச்சை நிகழ்த்தினார்.
<சற்று முன் பாராளுமன்றத்தில் கொட்டி தீர்த்தேன்>
“இன்றைய தினங்களில், 2009 ஆண்டில் தமிழ் மக்கள், நூறு, ஆயிர, இலட்சக்கணக்கில், கொல்லப்பட்டார்கள். கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள்.”
“இன்று ஆளும் அணி அமைச்சர்களின் வீடு, சொத்துகளை எரித்து கொலை செய்த வன்முறை, இந்த யுத்தம் மற்றும் 1983, 1977, 1958 க்கலவரங்களிலேயே ஆரம்பித்தது.”
“முதல் அரசியல் கொலை, 1959ல் பண்டாரநாயக்காவை கொலை செய்து, ஒரு பெளத்த ஆமதுரு ஆரம்பித்து வைத்தார். அதன்பின் பெளத்த மதத்தை அரசியலில் கலக்க விட்டு, இந்நாட்டை அழித்து விட்டீர்கள்.”
(சிங்கள மொழியில் இன்னும் சொன்னேன். ஆளும், எதிரணி உறுப்பினர்கள் கைதட்டி ஆமோசித்து கேட்டார்கள். முழுமையான காணொளி சற்று நேரத்தில் வரும்)