LGBTQ+ காமிக்ஸ்கள் உருவாக்கப்பட வேண்டும்

இலங்கையில் LGBTQ+ சமுகத்தை பற்றிய பெரியதொரு புரிதல் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை.

தற்போது பல்வேறு வகையான ஆதரவு நடவடிக்கைகளை பலரும் முன்னெடுத்து ஓரளவு புரிதலை ஏற்படுத்த முனைகின்றனர். ஆரோக்கியமான காலமாக இதனைக் காண்கிறேன் என சுயாதீன திரைப்பட இயக்குனர் பவனீதா கூறியுள்ளார்.

எனது பங்களிப்பையும் வழங்க விரும்பி கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு படைப்புகளில் பங்களிப்பு செய்து வருகின்றேன். நானும் ஒரு முழுமையான படைப்பை வழங்க வேண்டும் என்று விரும்பி ஆரம்பித்தது தான் இந்த காமிக்ஸ் முயற்சி.உலகம் முழுவதும் LGBTQ+ காமிக்ஸ்கள், கிராஃபிக் நாவல்கள், சிறுவர் இலக்கியங்கள் காணப்படுகின்றன.‌

அந்த புத்தகங்கள் நம் சிறார்களுக்கு வாசிக்க கிடைத்தால் நிச்சயம் மிகப்பெரிய புரிதல் அவர்களுக்குள் உருவாகும். மேலைத்தேய நாடுகள் செய்துவந்ததை நமது நாட்டுக்கும் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம்.

இன்றைய சூழலில் சிறுவர்களுக்கான LGBTQ+ காமிக்ஸ்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த முயற்சியில் முதல் தடம் தான் இந்த”Red shoes”. ஒரு படைப்பாளியாக மிகுந்த சவாலாக அமைந்த படைப்பு தான் Red shoes.

காரணம் எந்த கட்டத்திலும் குயர் மக்களை புண்படுத்தி விட கூடாது. அவர்கள் மீதான கழிவுணர்ச்சியை தூண்டுவதாகவோ அறிவுரை கூறும் மேட்டிமைபடைப்பாகவோ பிரசார கதையாகவோ இருந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினேன்.‌

ஒரு படைப்பாளியாக இயல்பாக்கல் நடவடிக்கையை வலியுறுத்த வேண்டும் என்று விரும்பினேன். மிக முக்கியமாக என் கதைகளில் பெண்ணுலகம் மட்டுமே இருக்கும்.‌

அதை கடந்து நான் எழுத வேண்டும் என்ற சவால் எனக்கு இருந்தது‌. அதை முறையாக செய்ய‌ முடிந்தவரை முயன்றுள்ளேன். எனது முயற்சிக்கு பக்கபலமாக இருந்த எனது குழுவினருக்கு நன்றிகள்.‌இவர்கள் யாரோ அல்லர். நாம் தான். நமது உடன்பிறப்புகள், குடும்பத்தவர்கள், நண்பர்கள்,அயலவர்கள், வாழ்க்கை துணை, நம்மை சுற்றி மருத்துவராக ஆசிரியராக ஓட்டுனராக நம் மத்தியில் நம்மோடு வாழும் சக மனிதர்கள். மாற வேண்டியது நாம் தான்.‌

புரிதலை வளர்த்துக்கொண்டு வாழ முற்படுவோம்.‌ இந்த காமிக்ஸை வாசித்து பாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.‌ பிடிக்காவிட்டால் கூட நீங்கள் எழுதலாம். நல்ல உரையாடலுக்கான பொது வெளி திறக்கப்படட்டும்.‌புரிதல் ஏற்படட்டும்.‌ எமது சுயாதீன முயற்சிகளுக்கு நீங்கள் தரும் ஆதரவு தொடரட்டும் என சுயாதீன திரைப்பட இயக்குனர் பவனீதா கூறியுள்ளார்.

நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!