வரலாறுகளையும் நன்கு அறிந்தவர் | உங்களைப் பற்றி நிறைய எழுத வேண்டும்

அவரின் பிரிவு தொடர்பாக நடிகர் , தொகுப்பாளர் எல்ரோய் அவர்கள் இரங்கல் பதிவை இட்டுள்ளார்

“..கொழும்பில் பாதுகாப்பு கெடுபிடியான யுத்த காலம்! எனது ஊடகத்துறையின் ஆரம்ப காலங்கள். துறைசார்ந்து சவால் மிகுந்த படைப்புக்களை உருவாக்குவதற்கு நல் வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்தவர்.

தனிப்பட்ட ரீதியில் பணி சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் நன்கு அக்கறை கொண்டவர்.-சக்திடிவியில் ஒளிபரப்பான நான் இயக்கிய “நிஜத்தின் நிழல்” (குற்றமும் அதன் பின்னணியும், CrimeFact) தொடர் நாடகத்தின் வெற்றிக்கு அவரின் பங்கு அளப்பெரியது.

‘க்ரைம்’ ஆவணத் திரைப்படங்களுக்காக பல்வேறு விதமான ஏற்பாடுகளை மாத்திரமல்ல! பல பொலிஸ் மா அதிபர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர். இவரின் தூண்டுதலின் பேரிலேயே “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற நிகழ்ச்சியையும் நான் ஆரம்பித்தேன். பழைய பாடல்கள் மீது அதிக விருப்பம் கொண்டவர்.

வரலாறுகளையும் நன்கு அறிந்தவர். அன்புக்குரிய மனிதர், முன்னாள் பொலிஸ்மா அதிபரும் கலைஞர்களுக்கு என்றும் கைகொடுக்குதவும் இனிய மனிதர் ‘கலாநிதி அரசரட்ணம்’ ஐயா அவர்களின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. … உங்களைப் பற்றி நிறைய எழுத வேண்டும். உங்கள் ஆத்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!