நமது நாட்டில் ஐந்து தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள் தான் இருக்கிறது.சக்தி , வசந்தம் , ஸ்டார் , நேத்ரா , UTV இவை மற்றுமே புவிப்புறத் தொலைக்காட்சிகள் (Terrestrial television).
இவற்றை தவிர இலங்கையில் இருந்து இயங்க கூடிய கேபல் தொலைக்காட்சிகளும் உள்ளது.
ஆனால் இவற்றை எல்லாம் பற்றி பாராளுமன்றத்தில் பேசுவதற்கு கூட செய்திகளும் , சர்ச்சைகளும் இல்லை.
அப்படியென்றால்? ஒரு இணையத்தள தொலைக்காட்சி ஒன்றை பற்றி பாராளுமன்றத்தில் அதுவும் இலங்கை அரசியலில் மிக முக்கியமான ஒருவர் விமர்சசிக்கின்றார் என்றால் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
10000 லைக்ஸ்களை கொண்ட Batti டிவியின் செயற்பாடுகளை பற்றி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி MA சுமந்திரன் அவர்கள் விமர்சித்துள்ளார்.
அப்படி என்ன விமர்சிக்க இருக்கின்றது? . கடந்த யூலை மாதம் 19 ஆம் திகதி Batti டிவி ஒரு காணொளியை பதிவிடுகிறார்கள்.அதில் குறிப்பிடப்பட்டவை:
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் Batti டிவி தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றத்தில பேசிய சுமந்திரன் டிவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படியோ Batti டிவி மக்கள் பக்கம் இருந்து கருத்து வெளியிட்டிருந்தால் மகிழ்ச்சியே.