நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள covid-19 கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைய நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட மீமிலிமான கலந்தே எல பகுதியிலுள்ள தேசிய இளைஞர் படையணி கட்டிடத் தொகுதியானது தற்போது தனிமைப்படுத்தல் மையமாக அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு தனிமைப்படுத்தப்படும் தொற்றாளர்களுக்கு தேவையான குடிநீர் போத்தல்கள் இன்று (15) நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் ஊடாக நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட இராணுவப்படை பொறுப்பாளர் ஹசித்த அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபையின் உப தலைவர் சரத் அவர்களும் நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர் ராமஜெயம் அவர்களும் நுவரெலியா பிராந்தியத்துக்கான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.