தமிழனுக்கு புதுசு துமிலனின் பரிசு

டிஜிட்டல் ஊடகத்துறையில் புதிய உதயம்! இலங்கையில் மட்டுமல்லாது உலகளவில் பல்வேறு துறைகளில் குறிப்பாக கல்வித்துறை முதல் கட்டடத்துறை வரை தனக்கென தனியிடத்தை பிடித்த பன்முகப்படுத்தப்பட்ட குழு மற்றும் நிறுவனங்களின் தலைவரும் பல்துறை சார்ந்த தேர்ச்சி பெற்ற தொழிலதிபருமான திரு. துமிலன் சிவராஜா அவர்கள் ஊடகத்துறையில் தடம்பதிக்க தயாராகிவருகின்றார்.

இதன்படி, முதற்கட்டமாக டிஜிட்டல் ஊடகத்துறையை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இணையத்தளம், தொலைக்காட்சி மற்றும் வானோலி போன்ற ஊடகங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளம் துடிப்புள்ள இளைஞர்களைக் கொண்டு இந்த ஊடகங்களை நடத்தவுள்ளதாகவும் ஊடகத்துறையில் புதிய சரித்திரம் படைக்கும் வகையில் செய்தி, நிகழ்ச்சி போன்றவற்றை அமைக்கவுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான தகவல்கள் குறிப்பிடுகின்றன.

காலத்துக்கு காலம் ஊடகங்கள் தோற்றம்பெற்றாலும் அந்த ஊடகங்கள் நிலைப்பதற்கு பொருளாதாரம் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்ற நிலையில், மிகப்பெரிய முதலீடுகளுடன் மிகவும் பிரமாண்டமான முறையில் பம்பலப்பிடியில் தனது சொந்த கட்டடத்தொகுதியில் இந்த ஊடக நிறுவனத்தை தொழிலதிபர் திரு. திரு. துமிலன் சிவராஜா அவர்கள் ஆரம்பிக்கின்றார் எனபது இதன் சிறப்பம்சமாகும்.

Blue Ocean Residencies (Pvt) Ltd, Blue Ocean Realty (Pvt) Ltd, Blue Ocean Legend (Pvt) Ltd, Blue Ocean Breeze (Pvt) Ltd, Blue Ocean Waves (Pvt) Ltd, Blue Ocean Properties (Pvt) Ltd, Blue Ocean Investment (Pvt) Ltd, Link Construction (Pvt) Ltd, Link Realty (Pvt) Ltd, Link Legend (Pvt) Ltd, Link Properties (Pvt) Ltd, Alconn Construction (Pvt) Ltd, Land & Properties, Blue Ocean Real Estate (Pvt) Ltd, Link Real Estate (Pvt) Ltd, Blue Ocean Capital (Pvt) Ltd, Link Capital (Pvt) Ltd, Link Engineering (Pvt) Ltd, Sisira Builders (Pvt) Ltd, Blue Ocean Construction & Development (Pvt) Ltd, Blue Ocean Engineering (Pvt) Ltd, Link Aluminium (Pvt) Ltd, Link Ready-mix (Pvt) Ltd, Blue Ocean Overseas (Pvt) Ltd, Link Overseas (Pvt) Ltd, Blue Ocean Europe Ltd – United Kingdom, Blue Ocean Realty Canada INC, Blue Ocean Overseas Reak Estate LLC – UAE, Blue Ocean Engineering (Pvt) Ltd, Blue Ocean Facilities Management (Pvt) Ltd, Blue Ocean Home Appliances (Pvt) Ltd, Blue Ocean Marketing (Pvt) Ltd, Blue Ocean Technologies (Pvt) Ltd, Contessa (Pvt) Ltd, Achievers Marketing (Pvt) Ltd, Achievers Fashion (Pvt) Ltd, Blue Ocean Technologies (Pvt) Ltd, Link Logistics (Pvt) Ltd, Blue Ocean Holidays (Pvt) Ltd, Knowledge Base Business Studies (Pvt) Ltd, Knowledge Base Associates (Pvt) Ltd, Blue Ocean Consultancy Bureau (Pvt) Ltd, Link Engineering Consultancy Bureau (Pvt) Ltd ஆகியன அவரது பிரதான நிறுவனங்களாகும்.

இந்த வரிசையில் Blue Ocean Entertainment (Pvt) Ltd என்ற நிறுவனத்தின் கீழ் இந்த ஊடகங்கள் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊடகங்களின் பெயர்கள் குறித்த விபரத்தை விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.எது எப்படியோ இன்றைய காலத்தின் தேவையை அறிந்து நல்ல ஊடகங்களாக இந்த ஊடகங்களை பிரசவித்து வளர்த்தெடுப்பார்கள் என்பது எங்களது எதிர்பார்ப்பாகவுள்ளது.

திரு. துமிலன் சிவராஜா உட்உட்பட குழுவுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!