நமது நாட்டில் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களை காலை துறை மற்றும் ஊர்காரர்களை தவிர வேறு யாருக்கும் இவர்களை பற்றி தெரியாது.
இது யார் தவறு? திறமையான இந்த நடிகர்கள் செய்த தவறா? இல்லை இவர்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லதா ஊடகங்கள் மீது தவறா? இல்லை அந்தந்த ஊடகங்களில் உள்ள மேலதிகாரிகளின் பிரதேசவாத போக்கு தான் காரணமா/
எது எப்படியோ நல்ல திறமையான நடிகர்களும் சிறந்த சினிமா படைப்பாளிகளும் நமக்கு தெரியாமல் இருக்கின்றார்கள் என்றால் தென்னிந்திய சினிமா மோகமே காரணம்.
முதலாவதாக இந்திய சினிமாவை இலங்கையில் இருந்து இல்லாமல் ஆக்கவேண்டும். அதுவே எமது வெற்றி.
இவ்வளவு விடயத்தையும் நாம் ஏன் சொல்லுகிறோம் என்றால் நீங்கள் ஆதி டிரு வை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.நல்ல திறமையான நடிகர் ,சிறந்த படைப்பாளி.
இவரது நடிப்பிலும் விஷ்ணுஜனின் இயக்கத்திலும் உருவாகியுள்ள எதிர்வரும்19ம் திகதி டிசம்பர் 2019 எமது அபிமான திரையரங்கம் சாந்தி & சுகந்தி Cinemas மட்டக்களப்பு ஆகியவற்றில் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படம் மட்டு மண்ணில் இருந்து. மட்டு கலைஞசர்களின் உழைப்பில் மட்டக்களப்பில் உருவான முதல் முழு நீள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது முற்றுமுழுதாக மட்டகளப்பில் மாத்திரம் படமாக்கபட்டுள்ளதுடன் இதில் பணியாற்றிய கலைஞசர்கள் , தொழிநுட்ப கலைஞசர்கள், அனைவரும் மட்டு மண்ணின் மைந்தர்கள்.
எனவே இது மட்டு மண்ணின் படம், மட்டு மக்களின் படம் எனவே உங்கள் ஆதரவை வேண்டி உங்கள் வீட்டு பிள்ளைகள் நாங்கள் என்று சமூக வலைத்தளங்களில் இந்த படத்திற்கான பதிவுகள் தொடர்கிறது.
படம் மிக பெரிய வெற்றி பெற இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.