அவசரகால சட்டம் என்பது? ரெம்ப கவனம் தம்பி

✅ பொலிஸாருக்கு மாத்திரம் இருக்கின்ற – சந்தேக நபர்களை கைது செய்வதற்கான அதிகாரம் – தற்போது இலங்கையிலுள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கப்படுகிறது.

✅ பொலிஸார் தவிர்ந்த – ஏனைய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்களை – அத்தரப்பினரால் 48 மணித்தியாலயங்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படுகிறது.

✅ 48 மணித்தியாலங்களின் பின்னர் – பொலிஸாருக்கு சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டு – தடுப்பு காவல் கட்டளையின் கீழ் – அவரை ஒரு மாத காலம் தடுத்து வைக்க முடியும்.

✅ ஒரு மாத காலத்திற்கு மேல் குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டுமாயின் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் – மேலும் ஒரு மாத காலத்திற்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது.

✅ கைது செய்யப்படும் குறித்த சந்தேக நபரிடம் – முழுமையான விசாரணை முடிவடையும் வரை – நீதிமன்றத்திற்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் கிடையாது.

✅ கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படும் குறித்த சந்தேக நபர் – குற்றமிழைக்காதவர் என்பதனை பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே – பிணை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

✅ தேவை ஏற்படும் பட்சத்தில் – பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அதிகாரம் – பொலிஸ் மாஅதிபருக்கு இந்த சட்டத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!