ரசிகர்களை தக்க வைக்க தடுமாறும் தமிழ் இலத்திரனியல் ஊடகங்கள்

சந்துரு நாம் அனைவரும் அறிந்த ஊடக பிரபலம்.இலங்கையில் வரப்போகும் (unlimited internet) தொடர்பாக தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

இலங்கையின் தமிழ் இலத்திரனியல் ஊடகங்கள் தங்கள் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள தடுமாறிவரும் நிலையில்,
வரும் மாதம் முதல் இலங்கையில் இணைய பாவனை, எல்லையற்ற இணைய பாவனையாக மாறுகிறது.


(unlimited internet) இது தமிழ் இலத்திரனியல் ஊடகங்களுக்கு, மிகப் பெரிய பாதிப்பாக அமையும் என்பது நிச்சயம்.தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் உள்ள பலருக்கு, இந்தக் காலத்தில் ரசிகர்களுக்கு என்ன தேவை என்பதை அறியாமையும் இந்த வீழ்ச்சிக்கு காரணம்.


இது இலங்கை மட்டும் அல்ல, உலக நாடுகளே கண்ட உண்மை.
என்னதான் ஊடகங்களின் பாவனை குறைந்து வந்தாலும் சமூக வலைத்தள (digital Media, social media) பாவனை மிக வேகமாக அதிகரித்து வருகிறது
இது நமது நாட்டில் உள்ள புதிய சிந்தனை கொண்ட ,திறமையான புதிய படைப்பாளர்களுக்கு, மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்
Facebook App YouTube TikTok Instagram Twitter ஆகிய முக்கிய தளங்களில், உங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஆரம்பியுங்கள்..
வெற்றி உண்டு.

இவ்வாறு தனது முகப்புத்தக பக்கத்தில் சந்த்ரு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!