அபர்ணாவின் பார்த்தீபாவிற்கு குவியும் பாராட்டும் விமர்சனமும்


பார்த்தீபா’ திரைப்பட வெளியீட்டு விழா!

சக்தி FM தயாரித்துள்ள ‘பார்த்தீபா’ திரைப்பட வெளியீட்டு விழா நேற்று (20.11.2019) மாலை பம்பலப்பிட்டி மஜெஸ்ரிக் திரையரங்கில் இடம்பெற்றது.

சக்தி எப். எம். அலைவரிசைப் பிரதானி ஆர் பி அபர்ணாசுதனின் எழுத்து மற்றும் இயக்கம் ஆகியவற்றில் உருவான ‘பார்த்தீபா’ திரைப்படம், இலங்கை தமிழ் சினிமாவில் முக்கிய மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு – பாலா, படத்தொகுப்பு – அன்சலோ ஜோன்ஸ், இசை – வேள் பிரஜீவ், கலை – பானுக்க ஃபெர்ணான்டோ, இணை இயக்கம் – எஸ் ராஜ்பிரசாந், உதவி இயக்கம் – கே சுதர்சன், ஒப்பனை – காஞ்சனா மற்றும் குழுவினர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

கஜன் கணேசன், செரோலின் ஜே, ரஷீட் பிரபா சந்தீபனி, கே சந்திரசேகரன், எஸ் ஜீ பிரேம்காந், கோகு ஶ்ரீகுகன் மற்றும் ஃபேடி ஜே ஆகியோரின் நடிப்பில் ‘பார்த்தீபா’ திரைப்படத்தை சக்தி எப் எம் தயாரித்துள்ளது.

குறித்த திரைப்படத்தில் இடம்பெறும் “ஒரு முறை ஒரு முறை” பாடலை எஸ் பிரதீப்பும், “மாயமோ காயமோ நியாயமோ” பாடலை ஃபேடி ஜேயும், “அதிகம் பேசினால் மதிப்பிருக்காது அளந்து பேசடா”என்னும் பாடலை கே மகிந்தகுமாரும் பாடியுள்ளனர். அத்துடன் “ஒரு முறை உன்னைப் பார்த்தேன் உயிர் வரை நீதான் வேண்டும்” எனும் பாடலை ஹனிநயாகரா இசையமைத்துப் பாடியுள்ளார்.

‘பார்த்தீபா’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடலாசிரியர் வருண் துஷ்யந்தன் எழுதியுள்ளார்.

மறைந்து வரும் இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறைக்கு புதிய வடிவம் கொடுக்க முயற்சிக்கும் ஆர் பி அபர்ணாசுதனின் புதுமையான, ஆழமான எண்ணக்கருவுடன், சக்தி FM தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘பார்த்தீபா’ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

‘பார்த்தீபா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்ப்பதற்கு பின்வரும் லிங்கை அழுத்துங்கள்!

எந்தக் காலத்திலயும் நம்ம நாட்டுப் படங்களை எவனும் பார்க்கமாட்டாங்கன்னு தெரிஞ்சும்…

இன்னும் நம்பி படம் எடுப்பவர்கள்தான்
தன்னம்பிக்கையின் மொத்த உருவங்கள்
இலங்கையின் முதற்தர வானொலி அறிவிப்பாளர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்

சக்தி எப். எம். அலைவரிசைப் பிரதானி ஆர் பி அபர்ணாசுதன் உட்பட பார்த்தீபா பட குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!