தாமரை கோபுரத்தின் அழகை பார்க்க
தவறிய
தவறி விழுந்த நிதர்ஷன்
நேற்று உலக மக்களின் கவனத்தை இலங்கை தாமரை கோபுரம் ஈர்த்திருந்தது.
ஆனால் இந்த கோபுரத்தின் அழகிற்கு பின்னால் பெரிய கதையே உள்ளது.
குடும்ப வறுமைக்காக கொழும்பு வந்த நிதர்ஷன் தாமரை கோபுர பணியில் உதவி வேலைக்காரராக வேலை பார்க்க ஆரம்பித்தார்.
கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய கோணேஸ்வரன் நிதர்ஸன் என்ற இளைஞர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறையினருக்கு செய்தி கிடைக்கிறது
இந்த நிலையில், குறித்த மரணம் தொடர்பில் கொழும்பு மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து நிதர்சனின் உடலை கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வருவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வாகனத்தை இலவசமாக ஏற்பாடு செய்து தருவதாக அப்பகுதியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் சற்று தாமதித்து நிதர்சனின் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு பிரதேச சபை உறுப்பினர் வாகனத்திற்கான எரிபொருளை மாத்திரம் வழங்குமாறு கோரியிருந்தார், இதற்கு குடும்பத்தினர் சம்மதித்திருந்தனர்.
இதன் பின்னர் வாகனம் கொழும்பு சென்று மாணவனின் உடலை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி அக்கராயன்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்னர் வாகன கூலியாக முப்பதாயிரத்தை வழங்குமாறு கூறி பணத்தையும் பெற்றுச்சென்றுள்ளனர்.
வழமையாக கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு இவ்வாறான ஒரு தேவைக்கு வாகனத்தை பிடிப்பதாக இருந்தால் இருபதாயிரம் ரூபாவுக்கு பிடித்திருக்க முடியும் என்றும். இதனை விட தங்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு பலர் மாணவனின் உடலை கொண்டுவருவதற்கு உதவ தயாராக இருந்த நிலையில் இவர்கள் இப்படி நடந்து கொண்டது கவலையளிக்கிறது எனத் தெரிவித்த உறவினர்கள், ஆரம்பத்திலேயே தங்களிடம் உண்மையை கூறியிருந்தால் தாங்கள் அதற்கேற்ற ஒழுங்கை மேற்கொண்டிருப்போம் எனவும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளையின் செயலாளர் சேதுபதி அவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது, மாணவனின் உடலை கிளிநொச்சி கொண்டு வருவற்கு வாகனத்தை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கோரியிருந்தத நிலையில், அவரிடம் நான் தெளிவாகவே வாகன கூலி முப்பதாயிரம் எனத் தெரிவித்திருந்தேன் அதனையே நாங்கள் பெற்றுக்கொண்டோம், எங்களுக்கும் மாணவனின் குடும்பத்தினருக்கும் இடையில் எவ்வித தொடர்பாடலும் கிடையாது என்று அவர் தெரிவித்தார்
மரணமான நிதர்சன கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இவ்வருடம் உயிரியல் தொழிநுட்ப பிரிவில் பரீட்சைக்கு தோற்ற இருந்ததாகவும், இவரது குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர், இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரனும் குடும்பத்தில் காணப்படுகின்றனர், தந்தை சிறு தொழில் முயற்சி ஒன்றில் ஈடுபடுகின்றார், தாய் சமீபத்தில் ஆசிரியர் தொழிலுக்குள் உள்வாங்க்கப்பட்டுள்ளார், நிதர்சன தனது பொருளாதார தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காகவே தொழிலுக்கு சென்ற நிலையில் இவ் விபரீதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதர்சனின் ஆத்மா எங்கிருந்தாலும் தாமரை தடாகத்தின் அழகை பார்த்துக்கொண்டு தான் இருக்கும்.ஆத்ம சாந்தி நண்பா