சக்தி FM இன் Digital திரைப்புரட்சி-மாற்றம் வந்தால் மகிழ்ச்சி

சக்தி FM தயாரித்திருக்கும் Digital திரைப்படத்துக்கான Trailer மற்றும் இசை வெளியீடு. இம்மாதம் 18ஆம் திகதி மாலை 5 மணிமுதல் வெளியாகவுள்ளது.

அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த முயற்சி ஏனைய ஊடகங்களுக்கு சவாலாக அமையும் என ஊடக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

புரட்சியை இந்த முயற்சி நிச்சயம் ஏற்படுத்துமாக இருந்தால் அதுவே ஆரோக்கியமான விடயம்.

சக்தி FM பிரதானி அபர்ணா சுதனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இப்படைப்பில் இலங்கையின் பிரபல தமிழ் நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

பாலாவின் ஒளிப்பதிவில் ,ஏஞ்சலோ ஜோன்ஸ் படத்தொகுப்பில் பிரஜீவ் இசையமைத்துள்ளார்.

அபர்ணாவுக்கு உதவி இயக்குனர்களாக ராஜ்பரஷாந் மற்றும் சுதர்ஷன் கடமையாற்ற பானுக பெர்னாண்டோ கலை அமைப்பை வடிவமைத்துள்ளார்.

சக்தி FM இன் Digital திரைப்புரட்சி வெற்றி பெற இலங்கையின் கலைஞர்களின் திறமைகளை உலகறிய செய்யும் நம் நாட்டின் ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk குடும்பத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!