நேற்றய தினம் (27/5/19) நடைபெற்ற இணுவில் ஒண்றிய வருடாந்த கெளரவிப்பு விழாவில் ஈழம் சினிமாவில் அண்மைக்காலமாக சமூக அக்கறை மற்றும் யதார்த்த சினிமாவை இயக்கியும் நடித்தும் வருபவரான திரு. சபேசன் சண்முகநாதன் பல சமூக நலன் விரும்பிகளுடன் சேர்த்து கெளரவிக்கப்பட்டார் .
இவருக்கு நடிக சிரோன்மணி மணி விருதை விரிவுரையாளர் திரு ல லீசன் சந்திரமொளலீசன் இணுவில் ஒண்றியம் சார்பில் வழங்கினார் .
கடந்த சித்திரை மாதத்தில் (28/4/19) அன்று இவர் தழிழ்ச்செல்வி என்ற குறும்படத்தில் நடித்தமைக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதை நோர்வே தமிழர் விருது வழங்கும் விழாவில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது