”பொம்மை“ திரைப்படம் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 19 ம் திகதி திரைக்கு வருகிறது.
IBC தமிழ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் பொம்மை இலங்கை முழுதும் வெளியாகிறது.
IBC தமிழ் தயாரிப்பு நிறுவனமானது தொடர்ச்சியாக நம் கலைஞர்களைச் சர்வதேசத் தரமான சினிமாவை உருவாக்க வைக்கும் முயற்சியில் பல படைப்புக்களைத் தயாரித்திருக்கிறது. நமது கலைகளை வளர்க்க வேண்டிய கடப்பாடு நம்முடையதே என்பதன் அடிப்படையில் பொம்மை திரைப்படத்தைத் தயாரித்திருப்பது மிகவும் மகிழ்வளிக்கிறது. பல மிகத் திறமையான நமது கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் IBC பெருமை கொள்கிறது.
நவயுகா குகராஜா, யசோதா , திருமலை பிரணவன், சுகிர்தன் கிறிஸ்துராஜா,ரெக்சன் விக்கி, மல்லிகா கீர்த்தி, ஐங்கரன் ஜெனொஷியா போன்ற இலங்கையின் திறமை மிக்க நடிக நடிகைகளின் கூட்டு முயற்சியில் இத் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இது சுவீடன் நாட்டின் சேர்ந்த லுலீயா சர்வதேச திரைப்பட விழாவிலும் போடன் சர்வதேச திரைப்பட விழாவிலும் தமிழகம் சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை வென்றுள்ளது.
அத்தோடு சினி ரோயல் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தெரிவாகியுள்ளது.
இயக்கம் – நவயுகா குகராஜா
ஒளிப்பதிவு – மதுனி ஹிரன்யா அழகக்கோன் | வற்சு
இசை – M.ரஜனிகாந்த்
படத்தொகுப்பு – மாருதி.K
தயாரிப்பு வடிவமைப்பு – ஜோசுவா ஹெபி
ஒலி வடிவமைப்பு – சிக பூபதிராஜா
முதன்மை நிர்வாகத் தயாரிப்பாளர் – விக்கி
