தே,செந்தில்வேலவர் தலைமையிலான அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய குழுவினர் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் அவர்களை இன்று சந்தித்தனர் .
1 மணித்தியாலம் 30 நிமிடங்களாக நீடித்த சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
தமிழ் ஊடகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் , அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் , நோய்வாய்ப்பட்டிருக்கும் ஊடகர்களுக்கு வாழ்வாதார உதவிகள் , தமிழ் ஊடகர்கள் படுகொலைகள் தொடர்பில் இதுவரை கிடைக்காத நீதி உட்பட்ட பல விடயங்களை கனேடியத் தூதுவருக்கு எடுத்துக்கூறினர்.
அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவரும் , தினகரன் பிரதம ஆசிரியருமான தே.செந்தில்வேலவர் அவரகள்
அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய செயலாளரும் , தமிழன் பிரதம ஆசிரியருமான R . சிவராஜா
சுயாதீன ஊடகவியலாளர் கந்தையா பத்மநாதன்
சுயாதீன ஊடகவியலாளர் T . தரணீதரன்
சிரேஷ்ட ஊடகவியலாளர் சூர்யா சிறீதரன்
சுயாதீன ஊடகவியலாளர் கதிரேசன் சந்திரபிரகாஷ்
ஊடகவியலாளர் விமலச்சந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்