மலையகத்தில் பல திறமையான கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களது பல திறமைகளை நாம் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
பாடல் , குறுந் திரைப்படம் , சமூக வலைதள பதிவுகள் என அட்டகாசம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த வாரம் இராகலை சென்லெனாட்ஸ் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்களால் பாடல் ஒன்று உருவாக்கப்படுள்ளது.
ச.சுஜீவன் இசையில் உருவாகியுள்ள ‘அலை அலையாய்’ பாடலுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது
ச.தவயோகன் வரிகள் அட்டகாசமாக உள்ளது. உண்மையில் இவர்களது திறமைகளுக்கு னால எதிர்காலம் உள்ளது.
தவயோகன், மஞ்சுளா இவர்கள் நடிப்பை பார்க்கும் சந்தர்ப்பம் விரைவில் கிடைக்கும்.
பாடல் குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.
ALAI ALAIYAI Official Lyrical Video Song Lyrics : Thavayogan Music : Sujeewan Cast : Thavayogan | Manjula