மிருன் மிருணன் ஊடகத்துறை , கலைத்துறை என்று அனைத்திலும் சாதிக்க துடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.
பல இளம் வானொலி அறிவிப்பாளர்கள் இவர் மூலமாக வெளி உலகிற்கு வந்தார்கள்.
வானொலியில் அவர் பல சாதனைகளை படைத்து சினிமா துறையில் களமிறங்கி பரவலாக பேசப்பட்டார்.

இப்போது புதிய செய்தி அவரது அடுத்த படைப்பு தொடர்பாக வெளிவந்துள்ளது.

AAS CREATION தயாரிப்பில் “காதல் கிரைம்” திரைபடத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.

இந்த திரைபடத்தில் அவருக்கு இணையாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசிக்க அவர் மனதுக்கு வந்தவர் இலங்கை மண்ணின் சிறந்த நடிகர் ஜெராட் நோயல் .

கூடவே பிரமிக்க வைக்கும் அழகுடன் இந்த மண்ணில் பிறந்துள்ள சப்னா பாதுக்க நடிக்கிறார்.

நாட்டின் இளம் துடிப்புள்ள பல கலைஞர்கள் பங்களிப்புடன் வெளிவரவிருக்கும் “காதல் கிரைம்” நிச்சயமாக பேசப்படும் .

காரணம் அப்படிப்பட்ட கொம்போ மிருன் மிருணன் , ஜெராட் …..

படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.