பல செய்தி வாசிப்பாளர்கள் இலங்கை மக்கள் மத்தியில் மறக்க முடியாதவர்கள் .
அந்த வகையில் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் செய்தி வாசிப்பு என்றால் அது சக்தி ரஞ்சனி ராஜரட்ணம் தான் .
அவரது தமிழ் உச்சரிப்பு , நேர்த்தியான மொழி நடை , தடுமாற்றம் இல்லாத வாசிப்பு இவை அனைத்தும் மக்களை கவர்ந்துள்ளது .
ஆனால் பல மாதங்களாக தொலைக்காட்சியில் காணமுடியாத ரஞ்சனியை மீண்டும் செய்திகளுடன் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது .
அது டெய்லி சிலோன் முகப்புத்தக பக்கம் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளார் . அவரது அதே செய்தி வாசிப்பு திறமையும் பல துறைகளை பற்றி அவர் அறிந்த விடயங்களும் சிறப்பு .
தொடர்ந்து அவரது செய்தி வழங்குதல் வெற்றி பெற இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.