பிக் பாஸ் பைத்தியம் தொடங்கியது.நமது நாட்டிலுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சும்மாவே பார்க்கமாட்டார்கள்.இதில் இது வேறயா?.
பிக் பாஸ் 6 நிகழ்ச்சிக்கு இலங்கையில் இருந்து இருவர் சென்றுள்ளனர்.
ஜனனி மற்றும் தினு. இதில் ஜனனியை பற்றி சொல்ல வேண்டும்.
IBC தமிழில் பல நிகழ்ச்சிகளை தயாரித்து தொகுத்து வழங்கிவருகிறார்.
இவரது நிகழ்ச்சிகளை ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக பார்வையிட்டனர்.
அது மட்டுமல்ல யூ டியூப் சேனல்களில் இவரது நிகழ்ச்சிகள் அதிகமாக பார்க்கபட்டது.
இந்த விடயங்கள் விஜய் TV காரனுக்கு எட்ட உடனே வாய்ப்பு வாங்கிவிட்டான்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு நன்கு தெரிந்த ஜனனியை பாட்டியாளராக கொண்டு வந்தால் அதிகமாக நிகழ்ச்சியை பார்க்க வைக்க முடியும் என்ற நரித்தந்திரமே ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு.
நமது நாட்டிலுள்ள ஒரு தொகுப்பாளருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது நமக்கு பெருமையே…
இருவருக்கும் எமது வாழ்த்துக்கள்.