ஜெனோசன் ராஜேஸ்வரன் இயக்கத்தில் “உன் நினைவுகளில்”காணொளிப்பாடலின் முதல் பார்வையை இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டு வைத்தார்.
முகேஷ் ரவி மற்றும் பிரீத்தி குமாரி நடித்திருக்கும் காணொளிப்பாடலானா உன் நினைவுகளில். பாடலுக்கு இசையமைத்து பாடியிருக்கின்றார் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் செல்லப்பிள்ளை திரைப்படத்தின் இசையமைப்பாளர் தீசன் அவர்கள்.
ஒளிப்பதிவாளராக றெஜி செல்வராசா பணியாற்றியிருக்கின்றார். இவர் அண்மையில் கதிர் மற்றும் சமுத்திரகனி இணைந்து நடிக்கும் திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கின்றார். மேதகு மற்றும் சல்லியர்கள் திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் சி.எம்.இளங்கோவன் இப்பாடலுக்கான படத்தொகுப்பு பணியை செய்திருக்கின்றார்.
பாடல் வரிகளை அ.ப.இராசா எழுதியிருக்கின்றார். இவர் வரிகளில் உருவாகிய குட்டிப்பட்டாஸ் மற்றும் சுகர் பேபி ஆகிய பாடல்கள் அண்மையில் ஹிட்டான பாடல்களாக இருக்கின்றன. அந்த வகையிலும் இந்தப்பாடலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பாடலுக்கான பெரும் ஆதரவு தரும் வகையில் செல்லப்பிள்ளை திரைப்பட இயக்குனர் அருண்சந்திரன் அவர்களுக்கு பாடல் குழுவினர் தங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இந்த காதல் பாடலின் முதற்பார்வையை இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் மனோஜ் பாரதிராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கின்றனர். இயக்குனர் ஜெனோசன் தற்போது தென்னிந்திய நடிகர் விமலின் “தெய்வ மச்சான்” திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியபின் இப்பாடலை சென்னையிலேயே உருவாக்கியிருக்கின்றார்.
இப்பாடலை தயாரித்து வெளியிடுகின்றார் (படைப்பாளிகள் உலகம்) Tamil Creators ஐங்கரன் கதிர்காமநாதன் அவர்கள். இலங்கை தமிழ் சினிமாவின் பலவேறு கட்டங்களுக்கு ஆணிவேராக இருக்கும் இவரது சிலோன் பிக்ஸர்ச் யூடியுப் தளத்தில் விரைவில் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.