இன்று காலை முதல் மதியம் வரை கொழும்பு கோட்டை பகுதியில் பொலிஸார் வீதி தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
இதை கண்காணிப்பதற்க்காக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் வேஷ்டியுடன் காலம் இறங்கி இருந்தார்.
என்ன ஒரு துணிச்சலோடு அவர் பொலிசாரிடம் இந்த வீதி தடை தொடர்பாக வினவினார்.
இது தொடர்பாக அவர் தனது முகப்புத்தகத்தில் இட்ட பதிவு இதோ
<சற்றுமுன்; நானும், முஜிபுரும் கொழும்பு எம்பீக்கள் என்ற முறையில் கண்காணிப்பு நடவடிக்கையில்…>காலிமுக திடலை சுற்றி இருக்கும் சாலைகளை அடைத்து இரும்பு வேலிகளில் பயங்கர முள்களை பொறுத்தி, பொலிஸ், அதிரடிபடை மற்றும் கடற்படை சிப்பாய்களை, அரசு நிறுத்தியுள்ளது. “அரச பயங்கரவாத” நடவடிக்கைகள் திட்டமிடப்படுகின்றனவா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. கொழும்பு மாவட்ட எம்பீக்களான நானும், முஜிபுரும் அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்க சென்றோம்.”நாட்டின் பொலிசாராக செயல்படுங்கள். அரசாங்கத்தின் பொலிசாராக செயற்பட வேண்டாம்” என தெளிவாக பொலீசாரிடம் சொன்னோம்.நாம் அனைத்து காவலரண்களுக்கும், சென்று பேசியதை அடுத்து அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டமை கண்கூடாக தெரிந்தது.