இப்போ நாட்டிற்கு தேவை தலை அல்ல மூளை.
ஹரீன் பெர்ணான்டோ தன் அரசியல் வரலாற்றிலேயே இன்றுதான் உருப்படியான ஒரு யோசனையை முன்வைத்துள்ளார்.
பொருளியல் வல்லுனரான ஹர்ஷாவை இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கவேண்டும் என்பதே அந்த யோசனை.
நீர் குழாய்ல வெடிப்பு ஏற்பட்டால் ப்ளம்பரைத்தான் கூப்பிடுவோம்.காரில் கோளாறு ஏற்பட்டால் மெக்கானிக்கைத்தான் கூப்பிடுவோம்.
இன்று நம் நாட்டில் ஏற்பட்டிருப்பது பொருளாதார பிரச்சினை. இதற்கு சரியான தெரிவு ஹர்ஷா என்பதில் ஏராளமான மக்களுக்கு மாற்று கருத்து இல்லை என்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை கோட்டா வீட்டிற்கு போனதும் முடிந்துவிடும் பிரச்சினை அல்ல. முறையான திட்டமிடல், ஒழுங்கமைத்தல், செயற்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் இல்லாவிடின் பிரச்சினை பாரதூரமாக மாறிவிடும்.
ஆசியா நாடுகளில் எழுத்தறிவு வீதத்தில் முதல் 6 இடங்களுக்குள் நம் நாடு இருக்கிறது. ஆனால் நம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தில் படிப்பறிவு அற்றவர்களின் எண்ணிக்கைத்தான் அதிகம்.
படிப்பறிவுபொருளியல் துறைசார் அனுபவமும் தேர்ச்சியும்அரசியல் அனுபவமும்மக்களாகிய நமது ஆதரவும் இருந்தால்இடைக்கால ஜனாதிபதியாக இவர் தன் கடமையை செய்வார் என எதிர்ப்பார்க்கலாம். 6 மாதம் இவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமா?
நன்றி : சமூக வலைத்தள பதிவாளரும் , இயக்குனருமான ரூபன் பிலிப்பின் முகப்புத்தகத்தில் இருந்து…