யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் அண்டிஜன் பரிசோதனைகளில் 375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன அதில் 74 பேர் பி சிஆர் பரிசோதனையிலும் 301 பேர் துரித அன்ரியன் பரி சோதனையில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு ள்ளார்கள்.
தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்கள் அப்பகுதி சுகாதார பிரிவினரால் நோயின் தன்மைக் கிணங்க சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வுள்ளதோடு ஏனையோர் இடைக்கால கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.