தரமான திரில் குறும் திரைப்படம் | அஜெய் காந்தின் THE MYTH

நமது கலைத்துறை சாதாரமானது என்று யாரும் சொல்லி விட முடியாது.

காரணம் அத்தனை திறமைகள் எல்லோர் மத்தியிலும் கொட்டிக்கிடக்கிறது.

காதல் கதை என்றால் அதற்கு ஒரு இயக்குனர், திரில் கதை என்றால் அதற்கு ஒரு இயக்குனர் என்று பலரும் கலக்கும் காலம் இது.

குறுந் திரைப்படங்களில் திரில் கதை என்பது அது ஒரு வித்தியாசமான கற்பனை.

அந்த கற்பனையின் ராஜா தான் அஜெய் காந்த்.அவரின் புதிய படைப்பு “THE MYTH”கடந்த முதலாம் திகதி வெளிவந்தது.

இதே சாயலில் சில இந்திய தமிழ் படங்களை நாம் பார்த்து இருந்தாலும் பல மாற்றங்களை தந்து தரமான திரில் குறும் திரைப்படமாக இயக்கி உள்ளார் அஜெய் காந்த் .

உமா வரதராஜன் , சஞ்ஜீவ் வாசுதேவ் கிருஷ்ணன் மற்றும் கமெஷ் மனோகர் தமது கதாபாத்திரத்தை அருமையான முறையில் நடித்து காட்டியுள்ளனர்.

சஞ்ஜீவ் வாசுதேவ் கிருஷ்ணன் அவருடைய குரலில் நிஜமாகவே ஒரு மேஜிக் இருக்கிறது.

இந்த படத்தை பார்த்தால் அது விளங்கும்.பாடலுக்கு மட்டுமல்லாமல் படத்திற்க்கு ஏற்றது போலவும் அவரின் குரல் மிக அருமையாக உள்ளது அது உண்மையிலே அற்புதம் தான்.


இயக்குனர் அஜய் மற்றும் மொத்த அணிக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!