இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அதன்படி, இலங்கை அணிக்கு 82 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
ஏனைய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வௌியேறினர்.
இலங்கை அணி சார்பில் அதிரடி பந்துவீச்சில் ஈடுபட்ட வனிந்து ஹசரங்க 09 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அணித்தலைவர் தசுன் சானக 2 விக்கெட்டுக்களை வீழத்தினார்.
போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்களில் இடம்பெற்று வருகிறது.
முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிப் பெறும் அணி தொடரை கைப்பற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.