நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு மகாபலிபுரம் சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான யாஷிகா ஆனந்த் தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் கிழக்கு கடற்கரை சாலையில் திடீரென விபத்துக்குள்ளானது. கார் கட்டுப்பாட்டை இழந்ததால் தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்த நிலையில் யாஷிகா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது யாஷிகாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.